புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பது
cri
சீன புத்தாண்டு வாழ்த்துக்களை ஒவ்வொருகொருவர் தெரிவிப்பது, வசந்த விழாவின் முக்கிய பகுதியாகும். காலை எழுந்ததும் மூத்தோருக்கு இளையோர், மதிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். வெளியே பிறரை சந்திக்கின்ற போது, ஒருவருக்கு ஒருவர் "புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று சொல்ல வேண்டும். புதிய ஆண்டில், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை இது வெளிப்படுத்துகின்றது. இப்போது நீங்கள் கேட்க இருக்கும் பாடல், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பது என்பதாகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பரந்த அளவில் பாடப்படுகின்ற நாட்டுப்புறப்பாடலாகும். வசந்த விழாவின் மங்களமான மகிழச்சியான சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் அது வெளிப்படுத்துகின்றது.
|
|