• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-23 09:36:29    
குதிரை நடனப் போட்டி திடல் வீராங்கனை Liu Li Na 2

cri

அவர் கலந்து கொண்ட போட்டி, குதிரை நடனம் ஆகும். இப்போட்டியில் மனிதருக்கும், குதிரைக்குமிடை புரிந்துணர்வு முக்கியமானது. குதிரைகள், சவாரி செய்பவரின் விருப்பத்தின் படி செயல்பட வேண்டும். மனிதரும், குதிரையும் இசைவாக பழகிச் செயல்பட வேண்டும். Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை அவர் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. அவர் கூறியதாவது:
"போட்டிக்கு நன்றாக ஆயத்தம் செய்யவில்லை. குதிரையுடன் செவ்வனே ஒருங்கிணையவில்லை. இதனால் போட்டியில் வெற்றி பெறவில்லை" என்றார், அவர்.

2005ஆம் ஆண்டு, Liu Li Na, குதிரையேற்றக் கலை வல்லரசான ஜெர்மனிக்கு சென்று, 2008ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்தார். சீனாவின் பெரும்பாலான விளையாட்டு அணிகளின் வீரர்களைப் போலன்றி, குதிரையேற்றக் கலை அணியின் வீரர்கள், வெளிநாட்டில், பயிற்சி வகுப்புகளை தாங்காகவேதான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெளிநாட்டில், Liu Li Na, ஆண் வீரர்களை போல், கடும் உடல் உழைப்பில் ஈடுபட்டார். முந்தைய எட்டு ஆண்டுகளாக, அவர் தனியாக வெளிநாட்டில் பயிற்சி செய்திருந்தார். உற்றார் உறவினர்களும், நண்பர்களும் அவருடன் இருக்கவில்லை. இத்தகைய வாழ்க்கைக்கு Liu Li Na படிப்படியாக பழகிக் கொண்டார். குதிரையேற்றக் கலை பயிற்சிக்கான செலவு அதிகமாக இருப்பதால், வேறு செலவைக்குறைக்கும் பொருட்டு, அவர் சிக்கனமான வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது.

Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தேர்வாட்டத்தில் தோல்வியடைந்ததை போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, 2007ஆம் ஆண்டு நிதித்தொகை பற்றாக்குறையாக இருக்கும் சிங்கியாங் விளையாட்டு ஆணையம், அதிக பணத்தை செலவிட்டு. Liu Li Naவுக்கு "பிரோஷ்கா" என்னும் ஜெர்மன் குதிரையை வாங்கியது. 2007ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல், Liu Li Na மற்றும் அவரது "பிரோஷ்கா", ஸ்பெயின், ஹங்கேரி முதலிய நாடுகளில் நடைபெற்ற பெரும்பான்மையான சர்வதேச குதிரையேற்றக் கலை போட்டிகளில் கலந்து கொண்டனர்.
2008ஆம் ஆண்டின் மார்ச் திங்கள், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இரண்டு தேர்வாட்டங்களில் Liu Li Na பெற்ற புள்ளிகள்,

வரையறைக்கு ஏற்றதாக அமைந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போடியின் குதிரை நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்று தந்தன. Liu Li Naவின் இந்த வெற்றியுடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அனைத்து 28 போட்டிகளிலும் சீன ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்ளும் குறிக்கோள் நனவானது. இது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில், புதிய பதிவாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றக் கலை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை பெற்ற முதலாவது சீன வீராங்களை அவராவார். Liu Li Na கூறியதாவது:

"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றக் கலை திடலில், சீன வீரர்கள் காட்சியளிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இது, அதிகமானோரின் விருப்பமாகும். அனைவரின் கனவை நான் நனவாக்கியுள்ளேன்" என்றார், அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், Liu Li Na பதக்கத்தைப் பெறவில்லை என்ற போதிலும், அவரது சிறப்பான செயல்பாடு, பார்வையாளர்களின் பாராட்டை வென்றெடுத்துள்ளது.