50 ஆண்டுகளுக்கு முன் திபெத்தில் நிகழ்ந்த ஜனநாயகச் சீர்திருத்தத்தை நினைவு கூரும் வகையில், மார்ச் 28ம் நாளை அடிமைகள் விடுதலை பெற்ற நாளாக வகுக்க திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை முடிவெடுத்தது. திபெத்தின் பல்வேறு துறையினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
21ம் நாள் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், நினைவு நாளின் உருவாக்கம், மனதில் பசுமரத்து ஆணி போல் வரலாற்றை பதித்து, எதிர்காலத்தை முன்நோக்கி பார்ப்பதற்கானதே என்று திபெத்தின் பல்கலைக்கழக சுற்றுலாவுக்கான வெளிநாட்டு மொழி கழகத்தின் துணைத் தலைவர் Thubten Khedrup கூறினார்.
அடிமைகள் விடுதலை பெற்ற நாளின் உருவாக்கம் அவசியமான ஒன்றாகும். பழைய திபெத்தின் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ள இது துணை புரியும் என்று லாசா நகரிலான Jokhang கோயில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் Awang Chodrak கருத்து தெரிவித்தார்.
|