சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசு மற்றும் கல்வி வாரியங்களில் திபெத் மொழியிலான மென்பொருளை சீன அறிவியல் கழகம் உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிதும் பரவல் செய்கின்றன. திபெத்தின் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் வளர்ச்சி திட்டகட்டுமானத்தை விரைவுப்படுத்த இது துணைபுரியும்.
அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் திபெத் மொழியிலான கணினி மென் பொருட்கள், திபெத் மொழியிலான Linux கணினி தொகுதி முதலியவை உள்ளன. இந்த கணினி மென் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், திபெத் பல்கலைக்கழக்கம் கல்வித் துறையில் சிறந்த சாதனைகளை பெற்றுள்ளது. 150க்கு அதிகமான துவக்க மற்றும் இடை நிலை பள்ளிகள் இத்தகைய மென் பொருட்களை பயன்படுத்துகின்றன.
தவிர, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் திபெத் மொழி விவகாரக் குழுவின் அலுவலகம், திபெத் நாளேடு, திபெத் தொலைக்காட்சி நிலையம், திபெத் வானொலி நிலையம் முதலியவை இத்தகைய மென் பொருட்களை பயன்படுத்துகின்றன.
|