• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-02 16:48:59    
ஆப்பிரிக்காவின் கலை

cri

ஆப்பிரிக்க கண்டம், 3 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்டம், மனித நாகரிகத்தின் தொட்டில் அழைக்கப்படுகிறது. மனித குல வளர்ச்சியின் நீண்டகால வரலாற்றில், தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கைச் சூழல் மற்றும் நாகரிகத்துடன், இக்கண்டத்தில், உயிர் ஆற்றல் மிகுந்த கலை வடிவங்கள் உருவாகியுள்ளன.


நவீன கலையின் வளர்ச்சிக்கு இது உந்து ஆற்றலாக விளங்குகிறது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் வளர்ந்து, சீன-ஆப்பிரிக்க பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாக மாறியுள்ளது. ஆப்பிரிக்க பண்பாடு மற்றும் கலைகள், சீனாவில் மேலதிகமான கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பின்னணியில், ஆப்பிரிக்காவின் பண்பாட்டை, சீனாவின் சில அரசு சாரா நிறுவனங்கள் உட்புகுத்தி வருகின்றன.


பெய்ஜிங் qiao கலை மையத்தின் கண்காட்சி மண்டபத்தில், கேமரூணின் மிகப் பண்டைய ஒரு வகை மேளம் பற்றி, பணியாளர் ஒருவர் மக்களிடம் விளக்கினார்.


சீன-ஆப்பிரிக்க அரசு சாரா வணிகச் சங்கம், சீனாவிலுள்ள கேமரூண் தூதரகம், பெய்ஜிங் qiao கலை மையம் முதலியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆதிகால கலை மற்றும் நவீனமயமாக்க வாழ்க்கை என்ற ஆப்பிரிக்காவின் தலைசிறந்த கலைப் பொருட்களின் கண்காட்சி, பெய்ஜிங் qiao கலை மையத்தில் நடைபெற்றது. ஆப்பிரிக்காவின் அரசு மற்றும் பொது மக்களால் பயன்படுத்தப்பட்ட மர மற்றும் கல் சிற்பங்கள், இசைக் கருவிகள், பல்வகை மதங்களின் கலைப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 500 கலைப் பொருட்கள் இதில் அடங்குகின்றன.


நண்பர்களே, ஆப்பிரிக்காவின் கலை என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.