• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 12:05:06    
துன்ஹுவாங்கிலான மொகௌ குகை

cri

சீனாவின் கேசு மாநிலத்தின் துன்ஹுவாங்கிலான மொகௌ குகை, ஆயிரம் புத்தர் குகை எனவும் அழைக்கப்படுகிறது. அது, 20ம் நூற்றாண்டுகாலத்தில், மிகவும் மதிப்புள்ள பண்பாட்டுக் கண்டுபிடிப்பாக விளங்கியது. Hosi தாழ்வாரத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள துன்ஹுவாங், அதன் எழில் மிக்க சுவர் ஓவியங்களாலும், சிலைகளாலும், உலகில் புகழ்பெறுகிறது.

அது, ச்சின் வம்சக்காலத்தின் துவக்கத்தில் கட்டியமைக்கப்பட்டது. அதில், 735 குகைகளும், 45 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள சுவர் ஓவியங்களும், 2415 வண்ண சிலைகளும் இருக்கின்றன. அது, உலகில், மிகப் பெரிய, புத்த மதக் கலை இடமாகும்.

கடந்த சில ஆண்டுகளில், இங்கு, திருமறை சேகரிப்புக் குகைகள் கண்டிபிடிக்கப்பட்டன. இங்கு, 50 ஆயிரத்துக்கு மேலான பழங்காலத் தொல்பொருட்கள் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. பின்னர், திருமறை சேகரிப்புக் குகைகளிலுள்ள மதமறைகளையும் துன்ஹுவாங்கின் கலையையும் சிறப்பாக ஆராயும் துறையான துன்ஹுவாங்கில் உருவாகியது.

ஆனால், அண்மைகாலத்தில், அங்குள்ள அதிகமான தொல்பொருட்கள் திருடப்பட்டன. அங்குள்ள செல்வங்கள் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டன.

1961ம் ஆண்டு, அது, சீனாவின் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டது. 1987ம் ஆண்டு, அது உலக பண்பாட்டு மரபுச் செல்வமாக அறிவிக்கப்பட்டது. அது, சீனாவில் 4 பெரிய கற்குகைகளில் ஒன்றாகும்.