• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 16:01:50    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: எமது நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது எண்ணங்களை சரமாக்கி வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

க்ளீட்டஸ்: தொடரும் உங்கள் அனைவரது கடித மற்றும் மின்னஞ்சல் வழி ஆதரவுக்கு நன்றிகள்.

கலை: நிகழ்ச்சிகளை தவறாமல் கேளுங்கள். கேட்பதோடு நில்லாமல் நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதியனுப்பவும் மறவாதீர்கள்.

க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் இயன்றவரை நேயர் நேரம் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வோம்.
கலை: எனவே, உற்சாகத்தோடு எழுதுங்கள், உங்கள் கடிதங்களும் மின்னஞ்சல்களும் எங்களை உவப்படையச் செய்யட்டும். இனி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.

கடிதப்பகுதி

கலை: வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் எழுதிய கடிதம். பெய்ஜிங்கிலுள்ள 798 கலைமன்றம் என்ற கட்டுரை சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் கேட்டேன். பெய்ஜிங்கின் வடபகுதியில் அமைந்துள்ள இந்தக் கலைமன்றம் பற்றிய தகவல்களை முதன்முறையாக அறிந்து மகிழ்ந்தேன். அங்கு அமைந்துள்ள பாரம்பரிய தேநீரகம், நவசீனா பற்றிய கண்காட்சி ஆகியவை பற்றிய தகவல்கள் மிகவும் நன்று. சுவையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி.
க்ளீட்டஸ்: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து சென்னை எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். உருளைக்கிழங்கு வறுவல் பற்றிய குறிப்பு வேறுபட்டதாக அமைந்திருந்தது. பால் சேர்த்து உருளைக்கிழங்கு வறுவல் செய்வது கொஞ்சம் வித்தியாசமே. செய்து பார்த்தபோது சுவையாகவே இருந்தது.

கலை: இசை நிகழ்ச்சி குறித்து மீனாட்சிபாளையம் கா. அருண் எழுதிய கடிதம். சீனாவின் 56 தேசிய இனங்களின் நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவிலிருந்து ஒலித்த பாடல்கள் இனிமையாக இருந்தன. தெரிவு செய்து ஒலிபரப்பிய அறிவிப்பாளர் திலகவதிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

க்ளீட்டஸ்: பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. சீன மொழியை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கற்றுக்கொள்வதும் சுலபமே என்று உணர்த்துகிறது அன்றாட சீன மொழி நிகழ்ச்சி. சீன மொழி பற்றிய இரு நிகழ்ச்சிகளிலான பாடங்களில் மிகச் சிறந்த பங்களிப்பை நல்கி வரும் கலையரசி மற்றும் வாணி அவர்களுக்கு எமது நன்றிகள்.

கலை: செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி குறித்து புதுகை ஜி. வரதராஜன் எழுதிய கருத்து. இருகரை உடன்பிறப்புகளுக்கு நன்மை பயக்கும் உடன்படிக்கை என்ற செய்தித்தொகுப்பு கேட்டேன். உணவு பொருள் பாதுகாப்பு, நீண்டகால அமைதிக்கு உதவி என பல அம்சங்கள் இதில் அடங்குகின்றன. 16 நகரங்களை இணைக்கக்கூடிய விமான சேவைகளை அதிகரிப்பது பற்றிய உடன்படிக்கை பெரும் பயன் தரும்.

க்ளீட்டஸ்: சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். குளுகுளு குவெய்யாங் என்ற தலைப்பில் குவெய்யாங்கிலான பயண அனுபவம் பற்றி தமிழன்பன் பகிர்ந்துகொண்டார். அதில் அழகுக்குளம் என்று ஒரு குளத்திற்கு பெயர் வந்தது குறித்து கூறிய கதை, மிக அழகாக இருந்தது.
கலை: சின்னவளையம் கு. மாரிமுத்து எழுதிய கடிதம். சீன விவசாயிகளின் முன்னேற்றம் பற்றிய செய்தித்தொகுப்பு கேட்டேன். அதில் விவசாயிகளின் வருமானம் உயர்ந்திருப்பதாக சொன்னதை கேட்டு மகிச்சியடைந்தேன். விவசாயிகளின் முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும். விவசாய மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் சீனாவின் முற்போக்கு திட்டங்களின் வெற்றி உலகிற்கு சிறந்த பாடமாகும்.

மின்னஞ்சல் பகுதி

ஊட்டி, S.K.சுரேந்திரன்
வெள்ளிக் கிழமை அன்றைய உங்கள் குரல் நிகழ்ச்சியைக் கேட்டேன். இந் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சீன வானொலி நேயர்கள் மன்றம் வழங்கிய சீன வானொலி அறிமுகக் கூட்டம் நிகழ்ச்சி மிகவும் புதுமையாகவும் மிக அருமையாகவும் அமைந்திருந்தது. மேலும் திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன் , திரு.பி.ஏ. நாச்சிமுத்து மற்றும் திரு.தெ.நா.மணிகன்டன் ஆகியோரின் கலந்துரையாடலும் நன்றாக அமைந்திருந்தது.
பேளுக்குறிச்சி, K. செந்தில்
டிசம்பர் 28ம் நாளன்று பேளுக்குறிச்சியில் நடைபெற்ற 20 வது கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைத்து நேயர்களுக்கும் நாமக்கல் மாவட்ட நேயர் மன்றத்தின் சார்ப்பாகவும் எனது சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
டிசம்பர் 28ம் நாளன்று பேளுக்குறிச்சியில் நடைபெற்ற 20-வது நேயர்மன்ற கருத்தரங்கில் நான் கலந்து கொண்டேன் வானொலியில் மட்டும் பெயர்களை கேட்ட பல நேயர்களை நேரில் சந்தித்த போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட நான்கு நிபுணர்களின் கருத்துரைகள் வாழ்க்கைக்கும், தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்ற வகையில் அமைந்திருந்தது. புதிய மற்றும் பழைய நேயர்கள் தொடர்ந்து தமிழ்பிரிவுக்கு கடிதம் எழுதத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது மொத்தத்தில் இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்ததது பாராட்டுக்கள்.

வளவனூர், உமாசங்கர், காயத்ரி, கல்பனா
டிசம்பர் 28ம் நாளன்று நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் நடைபெற்ற சீன வானொலியின் 20வது கருத்தரங்கத்திற்கு சென்றிருந்தோம். சீனாவில் தற்போது பணிபுரியும் கிளிட்டஸ் அவர்களும், முன்னர் பணிபுரிந்த திரு.கடிகாசலம், திரு. சிவக்குமார், திரு. ராஜாராம் ஆகியோரும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கம் மிகவும் சிறப்பாகவும் , நேயர்களுக்கு பயன் உள்ளதாகவும் இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், திரு.சிவக்குமார் அவர்களின் நீண்ட உரை தமிழ் மீதான அவரது நேசத்தை வெளிப்படுத்தியது. விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த நாமக்கல் மாவட்ட சீன வானொலி மன்றத்திற்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

விஜயமங்கலம், குணசீலன்
டிசம்பர் 28ம் நாளன்று நடந்த சின வானொலி நேயர் மன்ற கருத்தரங்கம் மிகவும் சிறப்பாக நடந்தது...அதில் நானும் கலந்துகொன்டென்...கலந்து கொன்ட நிபுணர்கள் சிறப்பாக உரையாற்றினர்...மிக அதிக அளவில் நேயர்கள் கலந்துகொணடனர்.
கலை: க்ளீட்டஸ், நேயர் மன்றக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனுபவம் எப்படி..??
செந்தளை என்.எஸ்.பாலமுரளி
டிசம்பர் 23ம் நாளன்று காலை சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்டேன். தி.கலையரசி வழங்கிய •கேள்வியும் பதிலும்• நிகழ்ச்சியில் அமெரிக்க கட்டுமான விருதுபெற்ற நோக்கியா குழுமம் பற்றி நிறைவாக கூறப்பட்டது. வாழ்த்துக்கள். மேலும் திலகவதி வழங்கிய இசை நிகழ்ச்சி பெரிதும் என்னை கவர்ந்தது. ஷாங்காய் மாநகரம் பற்றிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.ஷாங்காய் மாநகரம் உலகின் எட்டாவது பெரிய நகரமாகும்.

மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
2008ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளின் பார்வை சீனாவின் மீதுதான் பதிந்து இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் நிகழாத கடுமையான பனிப்பொழிவு, சிச்சுவான் நிலநடுக்கம் ஆகியவற்றால் சீனா அல்லலுற்றது ஆனால் இவ்வளவு சேதங்களுக்கும் நடுவில் ஆகஸ்ட் 8ம் நாள் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக சீனா நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு என் பாராட்டுக்கள்.

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
3.1.2009 அன்று சீன இசை நிகழ்ச்சி கேட்டேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற முதல் பாடலின் இதமான இசை, அமைதியான இதமான குரல் என்னை மிகவும் கவர்ந்தது. புத்தாண்டு என்றாலே ஆர்ப்பாட்டமான இசையும் ஓங்கிய குரலுமாக பாடப்படும்.பாடலைக் கேட்டு தலையே வெடித்துவிடும் போல இருக்கும். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் முதல் பாடல் இதமாக மனதை ஆட்கொண்டது. தொகுத்து வழங்கிய திலகவதிக்கும் சீன வானொலிக்கும் பாராட்டுக்கள்.