• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-04 16:25:19    
ஐரோப்பிய கால்பந்து போட்டியின் செய்திகள்

cri
பெய்ஜிங் நேரப்படி 2ம் நாள் விடியற்காலை, இத்தாலிய கால்பந்தாட்ட மன்றங்களிடை போட்டியின் 22வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. AC MILAN அணி, 3-0 என்ற கோல்கணக்கில், LAZIO அணியை தோற்கடித்தது.
இதர போட்டியில் INTER MILAN அணி, 1-1 என்ற கோல்கணக்கில் TORINO அணியுடன் சமன் செய்தது.

அதே காலத்தில் நடைபெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட மன்றங்களிடைபோட்டியின் 24வது சுற்றுப் போட்டியில், லிவர்பூல் அணி, 2-0 என்ற கோல்கணக்கில் செல்சி அணியை தோற்கடித்தது.
ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்களிடைபோட்டியின் 21வது சுற்றுப்போட்டியில் பார்சலோனா அணி, 2-1 என்ற கோல்கணக்கில் சேசிங் சான்டென்டர் அணியை தோற்கடித்தது.
21வது உலக ஆடவர் கை எறி பந்து சாம்பியன் பட்டப்போட்டி பிப்ரவரி முதல் நாள் கிரோவேஷிய தலைநகர் சாக்ரேபில் நிறைவடைந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கை எறி பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்ற பிரான்ஸ் அணி, 24-19 என்று கோல்கணக்கில் கிரோவேஷிய அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது. போலந்து அணி, 3வது இடத்தை பிடித்தது.

2ம் நாள், சர்வதேச கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிபர சம்மேளனம், மிகப் புதிய உலக கால்பந்தாட்ட மன்றங்களின் தரவரிசையை வெளியிட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் அணி, இதில் முதலிடம் வகிக்கிறது. ஜெர்மனியின் பாயெர்ன் முன்ச்சென் அணியும், ஸ்பெயினின் பார்சலோனா அணியும் 2வது மற்றும் 3வது இடத்தை வகிக்கின்றன.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை பெற்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், கஞ்சா புகைத்தமை குறித்து வருத்தம் கேட்கும் அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த நவம்பர் திங்களில், அவர் நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்ட போது கஞ்சா புகைத்தார் என்று அண்மையில் சில பிரிட்டன் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.
நீச்சல் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போதிலும், அனைவரும் வருத்தமடையக் கூடிய செயலை தான் செய்ததாக ஃபெல்ப்ஸ் குறிப்பிட்டார். இந்த செயல் தனது தகுநிலைக்கு பொருந்தாது. தன்னை பற்றிய மக்களின் ஆவலையும் விருப்பத்தையும் புண்படுத்தியது. இது குறித்த, தாம் மிகவும் வருத்தம் தெரிவிப்பதாக பிப்ரவரி முதல் நாள் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தெரிவித்தார்.