• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-05 11:22:00    
தியன்சின்னில் பாரம்பரிய வசந்த விழா பழக்கவழக்கங்கள்

cri


இப்போது, சீனாவின் மிக முக்கிய பாரம்பரிய விழாவான வசந்த விழா காலமாகும். வேறுபட்ட இடங்களில் வாழ்கின்ற சீனர்கள் இந்த விழா தொடர்பான வேறுபட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர். தியன்சின் மாநகரம், சீனாவில் நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் மிக அதிகமாக காணப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். இன்று, நாம் தியன்சின் சென்று சுற்றிப் பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு விழாவிலும் விடுமுறை நாட்களிலும், தியன்சின்னின் பண்டைக்கால பண்பாட்டு வீதியில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பெய்ஜிங் இசை நாடகம், தேனீர் கலை அரங்கேற்றம், பழைய திரைப்படங்கள் திரையிடுதல் முதலிய நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
வெளியூர் பயணியான சாங் ரென் மகிழ்ச்சியுடன் செய்தியாளரிடம் கூறியதாவது:
நான் தியன்சின்னில், ஹேய்ஹெ பண்பாட்டை உணர்ந்துகொண்டு, தியென் ஹேள மாளிகையைப் பார்வையிட்டுள்ளேன். யாங் லியு சிங்கின் புத்தாண்டு ஓவியம், சாங் குடும்பத்தின் சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைக் காட்சிகள், இங்கே காணப்படலாம் என்று அவர் கூறினார்.
சீன சந்திர நாட்காட்டியின் படி, முதல் திங்கள் 15ம் நாள் வரை அதாவது பிப்ரவரி 9ம் நாள் வரை, 600 ஆண்டுக்கால வரலாறுடைய இவ்வீதி மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும். இவ்வாண்டின் விழா நாட்களில், பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பண்டைய பண்பாட்டு வீதியில் பல நாட்டுப்புற நடவடிக்கைகளை நடத்தப்படுகின்றன. இவ்வீதியின் வளர்ச்சி தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லீ யுங் லி கூறியதாவது:
இவ்வாண்டு, பாரம்பரிய நாட்டுப்புற பூச்சந்தை, இசை நாடகங்கள் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். குறிப்பாக,

அரசர் ஆடை அணிகலன்கள்அணிந்த நடிகர்கள், பயணிகளுடனும் வீதியின் வணிகர்களுடனும் இணைந்து விளையாடி, சீனாவின் செல்வக் கடவுளின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால், வசந்த விழாவின் போது, மங்கலத்தைப் பெற்று, வணிகர்களும் பயணிகளும் மகிழ்ச்சியடைகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தியன்சின்னில் பயணம் மேற்கொண்ட போது, நாட்டுப்புற பழக்கவழக்கங்களைத் தவிர, புகழ்பெற்ற வெளிநாட்டு கட்டிடங்களைப் பார்வையிட வேண்டும். அண்மைக்கால சீனாவை அறிந்துகொள்ள வேண்டுமானால்,

தியன்சின் மாநகரைப் பார்வையிட வேண்டும் என்று சுற்றுலாத் துறையில் கூறப்படுவது துண்டு.சீனாவின் அண்மைக்கால கல்வி, இராணுவம், இருப்புப்பாதை, அஞ்சல், வேதியியல் முதலிய துறைகள் இம்மாநகரத்தில் வளரத் தொடங்கியமை, சீனாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சிகள் பல தியன்சின்னில் நிகழ்ந்தமை என்பவை, அதற்கு காரணங்களாகும். தியன்சின் மாநகரத்தின் ஹேபிங் பிரதேசத்தின் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆணையகத்தின் தலைவர் சின் பான்ஃ கூறியதாவது:
சிங் அரசர் மாளிகை, அண்மைக்கால தியன்சின் மற்றும் உலக அருங்காட்சியகம், நாட்டுப்பற்றுத் தொழில் முனைவோர் மற்றும் தளபதிகள வாழ்ந்த வீடுகள் உள்ளிட்ட பத்து காட்சி தலங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.