• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-06 16:59:15    
மியாவ் இன மக்களின் விழாக்கள்(இ)

cri
நெருப்பை வெட்டும் விழா

இது குய்சோ மாநிலத்தின் குவன் லிங் பிரதேசத்தில் வரவேற்கப்பட்ட பாரம்பரிய விழாவாகும். கிராமத்தின் விதிகளை வகுப்பது இவ்விழாவின் முக்கிய உள்ளடக்கமாகும். வேறுபட்ட குடும்பங்கள் மாறிமாறி கிராமத்திற்குத் தலைமை தாங்குகின்றன. இவ்விழாவில், தலைமை தாங்குகின்ற குடும்பம், அனைவரையும் அழைத்து கூட்டி, கிராமத்தின் விதிகளையும் பெரிய நிகழ்ச்சிகளையும் விவாதிக்கிறது. பின்பு, அக்குடும்பத்தின் வீட்டில் விருந்து நடத்தி, ஒரு கோழியைக் கொல்கிறது. அது, கோழியின் தலையை அடுத்த தலைமை தாங்கும் குடும்பத்திடம் வழங்குவது வழக்கம்.

மலைஏறுதல் விழா

மலை ஏறுதல் விழாவுக்கு, ஆயரத்துக்கு அதிக கால வரலாறு உண்டு. சந்திர நாட்களின்படி 3ம் திங்களின் 19ம் நாளில் இது கொண்டாடப்படுகிறது. அப்போது, குய் சோ மாநிலத்தின் தென்கிழக்கு பிரதேசத்தின் மியாவ் இன மக்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதையில் பாடல் பாட்டி மலையில் ஏறுகின்றனர். பல்வகை பாடல்கள் முழு வழியில் நிறைகின்றன. முதலில் மலை தலையில் சென்றவர், மலைஏறுதல் வீரராக அழைக்கப்படுகிறார். அவர் அனைவரின் மதிப்பு பெற்று மக்களின் அன்பு பெறுவார்.

Tiao hua விழா

குய்சோ மாநிலத்தின் guanling பிரதேசத்தின் பாரம்பரிய விழாவாகும். இது, இங்குள்ள மிக நீண்டகாலமான பெரியளவிலான விழாவாகும். நீண்டகாலமாக குழந்தை பெறாத இணைகளுக்கான விழாவாகும். மியோ இன மக்கள், தனிச்சிறப்பு மிக்க பலவகை நாட்டுப்புற இலக்கியங்களையும் கலைகளையும் படைத்துள்ளனர். இவற்றில் கவிதைகளும் செவிவழிக் கதைகளும் முக்கியமாக இடம்பெறுகின்றன. இவை வாய் வழி மூலம் இன்றும் பரவிவருகின்றன.

மியோ இனமக்கள் ஆடல்பாடலில் அதிக விருப்பம் கொண்டவர்களாவர். மியோ இன இசையும் நடனமும் இசை

நாடகமும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்றவை.

மியோ இன இளைஞர்கள், காதலித்து திருமணம் செய்வது வழக்கம். பெண்களும் ஆண்களும் பாட்டு பாடுவதன் மூலம் காதலர்களாக மாறி திருமணம் செய்கின்றர்.