சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட இளம் பெண் லுங் குவன்
cri
இத்தகைய இசையைக் கேட்கும் போது நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்ற பாடல் மூலம், சீனப் பாடல் துறையில் பரவலாக வரவேற்கப்பட்டமை லுங் குவன் நினைவுக்கு வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் புதிய பாடல் எதையும் பாடாமல், அண்மையில், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் என்ற தோற்றத்துடன் மக்களின் பார்வையில் நடமாடுகிறார். இனிமையான பாடல் மூலம் உலகிற்கு அன்பை காட்டிய அவர், தற்போது, பெரும் முயற்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் பொது நல இலட்சியத்தில் ஈடுபட்டுள்ளார். உலக வெப்பமேறலுக்கு எதிரான நடவடிக்கையின் தூதராக பொறுப்பேற்பது, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு பற்றிய பாடல்களை ஒலிப்பதிவு செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் இணையதளத்தை உருவாக்குவது, 10 ஆண்டுகளாக சைவ உணவு உட்கொள்வதில் ஊன்றி நிற்பது, இலகு ரக வாகனத்தைத் தெரிவு செய்வது ஆகியவற்றை செயல்படுத்திய லுங் குவன், உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்பாளராக திகழ்கிறார். 1998ஆம் ஆண்டு முதல் லுங் குவன் சைவ உணவு உட்கொண்டு வருகிறார். 10 ஆண்டுகள் கழிந்துள்ளன. சைவ உணவு உட்கொள்வது வேடிக்கையான முயற்சி என்ற கருத்தில் இருந்த அவர், ஒரு திங்களுக்குப் பின் சைவ உணவுகளை விரும்பத் தொடங்கினார். சைவப்பிரியரான அவர், நண்பர்களை உட்கொள்ளக் கூடாது என்ற கருத்தை மக்களுக்கு பரவலாக்க விரும்புகிறார். சைவ உணவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பது மட்டுமல்ல, உடல் நலத்துக்கும் துணை புரியும் என்று அனைவரிடம் தெரிவிக்கவும் அவர் விரும்புகிறார்.
பாடல் துறையிலிருந்து வெளியேறிய சில ஆண்டுகளில், பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதை தவிர, வீட்டில் ஓவியம் தீட்ட கற்றுக் கொண்டு, இணையதளத்தை உருவாக்கி, தாம் அணிய விரும்பும் ஆடையை லுங் குவன் தானே வடிவமைத்துத் தயாரிக்கிறார். ஓய்வு பெற்ற பின் லுங் குவன் மீண்டும் புறப்பட்டார். அவர் உருவாக்கிய குவங் தாங் வா என்ற சித்திர வரைபட உருவம் அவருடன் இணைந்து வெளியே வந்தது. தற்போது குவங் தாங் வா அவருடன் இணைந்து வளர்ந்து சுமார் ஓராண்டு ஆகிவிட்டது. மேலதிக மக்கள் மகழ்ச்சியை அனுபவிக்கும் பொருட்டு, இந்த உருவத்தை ஆடை மற்றும் விளையாட்டு பொம்மையாக தயாரிக்க லுங் குவன் விரும்புகிறார். குவங் தாங் வா மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தை பரவலாக்குவது என்பது அவரது முக்கியமான விருப்பமாகும்.
முன்பு பெரிய ரக ஜீப்பை விரும்பிய லுங் குவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட பின், மாசுப் பொருட்களை அதிகமாக வெளியேற்றும் கார் மீது ஆர்வம் கொள்ளவில்லை. அவர் பேசுகையில், கார் வாங்கும் போது இலகு ரக காரை தெரிவு செய்வது உறுதி என்று கூறினார். தனது இணையதளத்தில் பயணம் பற்றி லுங் குவன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அவர் எழுதியதாவது— நடக்க பழகுங்கள். நடக்க முடியவில்லை என்றால் மிதி வண்டியில் செல்லுங்கள். மிதி வண்டி ஓட்ட முடியவில்லை என்றால் பேருந்து அல்லது சுரங்க தொடர் வண்டியைத் தெரிவு செய்யுங்கள்.
|
|