• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-06 10:41:57    
NFL இறுதிப்போட்டி

cri

உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி முதல் நாள், 43வது அமெரிக்க தொழில் முறை ரக்பி என்னும் கால் பந்தாட்டத்தின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் துறைமுக நகரான Tampaவில் நடைபெற்றது. இப்போட்டியில், பாரம்பரிய வலிமைமிக்க அணியான, பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணி, கடைசி 35 வினாடிகளில், அரிசோனா கார்டினல்ஸ் அணியை, 27-23 என்ற புள்ளிகள்கணக்கில் வென்றது. NFL வரலாற்றில், 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற முதல் அணியாக ஸ்டீலர்ஸ் அணி மாறியுள்ளது.

பெய்ஜிங் நேரப்படி 2ம் நாள் அமெரிக்க NBA கூடைப்பந்து போட்டி, தொடர்ந்து நடைபெற்றது. கடந்த 10 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் அணி, 109-101 என்ற புள்ளிகள்கணக்கில் மின்னசோட்டா டிம்பர் வுல்வ்ஸ் அணியை தோற்கடித்தது. இது தொடர்ச்சியான 11வது வெற்றியாகும்.
2010ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை கண்டுகளிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்று கவலைப்படுத்துவதால், ரசிகர்கள் முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று 2010ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை ஒருங்கிணைப்புக் குழு அண்மையில் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், தென் ஆப்பிரிக்க கால்பந்து உலகக் கோப்பை, ஜெர்மனியில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை போன்று

செழுமையாக இல்லை. பொதுவாக கூறின் 2010ம் ஆண்டு தென் ஆபிரிக்க கால்பந்து உலகக் கோப்பை பாதிக்கப்படாது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிளேட்டர் தெரிவித்தார்.
21வது உலக ஆடவர் கை எறி பந்து சாம்பியன் பட்டப்போட்டி பிப்ரவரி முதல் நாள் கிரோவேஷிய தலைநகர் சாக்ரேபில் நிறைவடைந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கை எறி பந்து போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்ற பிரான்ஸ் அணி, 24-19 என்று கோல்கணக்கில் கிரோவேஷிய அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது. போலந்து அணி, 3வது இடத்தை பிடித்தது.