• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-09 15:15:37    
சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம்

cri

ஆதிகால கலை மற்றும் நவீனமயமாக்க வாழ்க்கை என்ற ஆப்பிரிக்க தலைசிறந்த கலைக் கண்காட்சி, பெய்ஜிங் qiao கலை மையத்தில் நடைபெற்றது. கோ துங் என்பவர், இந்த கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்து, அதிக பொருட்களை வினியோகித்தார். ஆப்பிரிக்க ஜூகாந்தாவில் அவர் 18 ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார். ஆப்பிரிக்க கலைக்கான சூழ்நிலையால் அவர் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க மக்களின் உண்மையான வாழ்க்கையை, ஆப்பிரிக்க கலை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இந்த வடிவத்தின் மூலம், ஆதிகால நினைவுகள் கையேற்றப்பட்டு, வெளிப்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், நவீன மேலை நாடுகளின் கலைக்கு, இந்த கலையின் வடிவம் பெரும் செல்வாக்கை கொண்டு வந்துள்ளது.


இந்த கண்காட்சியிலுல்ள பொருட்களை, மக்களிடம் விளக்கிக் கூறப்படுவதன் மூலம், ஆப்பிரிக்காவின் கலை வடிவங்களை பொது மக்கள் ஆழமாக புரிந்துகொள்கின்றனர். அதேவேளையில், நமது கட்டிட நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள் முதலியோர், ஆப்பிரிக்க கலையின் காரணிகளைக் கண்டுரசிக்கலாம் என்று கோதுங் தெரிவித்தார்.


ஆப்பிரிக்க கலையிலிருந்து, பிகாசோ உள்ளிட்ட மேலை நாடுகளின் கலைஞர்கள், பல அறிவுகளை கற்றுக்கொண்டனர். எனவே, சீன மக்களின் அறிவுத்திறமை, ஆப்பிரிக்காவின் கலை யம்சங்களுடன் தடையின்றி ஒன்றிணையலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம், நிலவியல் மற்றும் தேசிய இன இடைவெளியைத் தாண்டி, இரு நாடுகளின் மக்களுக்கிடையில் பரிமாற்றப் பாலமாக மாறலாம். இந்த கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்வதில் கலந்துகொண்ட qiao கலை மையத்தின் தலைவர் சொ சு லி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


நண்பர்களே, சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.