• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-09 16:26:55    
உயிர் உருவான கதை

cri

Scripps நிறுவனத்தின் கடலியல் ஆராய்ச்சியாளராக உள்ள Jeffrey Bada, மில்லர் இந்த ஆராய்ச்சியை நடத்தியபோது அவரிடம் பயின்ற பட்டதாரி மாணவராக இருந்தார். மில்லரின் ஆய்வின் மிச்சங்களை கொண்டிருந்த சில புட்டிகளை எதேச்சையாக அவர் கண்டுபிடித்தார். ஸ்டான்லி மில்லரின் சோதனையின் போது வெளியான புகழ்பெற்ற சோதனைக்கு அப்பாற்பட்டு, வேறுசில ஆய்வு முயற்சிகளும் மில்லரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் மூடிய தெற்மா குடுவை போன்ற அமைப்பில் நீர் மற்றும் வாயு இருந்தபோது நீராவி செலுத்தப்பட்டு வெடித்து சிதறும் குழம்பால் உயிர்கள் உருவாயின என்ற ஆய்வு. கிட்டதட்ட இது எரிமலை கக்கும் குழம்பு போன்றதாகும். Jeffrey Bada கண்டுபிடித்த ஆய்வின் மிச்சங்கள் இது தொடர்பானவையாகும். முக்கிய ஆய்வை தவிர வேறெந்த ஆய்வு முடிவுகளும் அப்போது வெளியிடப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளில் Bada வும் அவரது குழுவினரும் உயிரின் அடிப்படை இயக்கத்திற்க்கு இன்றியமையாத 22 அமினோ அமிலங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் 10 அமிலங்கள் இதற்கு முந்தைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படாதவை என்பது குறிப்பிடதக்கது.

இத்தகைய எழுச்சியூட்டக்கூடிய முடிவுகளை ஸ்டான்லி மில்லர் பயன்படுத்திய கருவி வெளிப்படுத்தாதது பற்றி இந்த ஆய்வில் ஈடுபட்ட Adam Johnson பேசுகின்றபோது, இப்போது நாம் கொண்டிருக்கும் தெளிவாக பகுப்பாய்ந்து அறியும் தொழிற்நுட்ப கருவிகள் அப்போது இல்லாமல் போனது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். தாங்கள் கண்டுபிடித்த ஆய்வு மிச்சங்களில் 10 அதிக அமிலங்களை கண்டதால், 1953 ஆம் ஆண்டு ஸ்டான்லி மில்லரால் நடத்தபட்ட சோதனையின் உண்மையான மாதிரிகளை மீளாய்வு செய்ய அவர்கள் எண்ணினர். அப்போது, அந்த தெற்மா குடுவையிலும் ஸ்டான்லி மில்லர் கண்டுபிடித்ததை விட மேலதிக உயிரின மூலக்கூறுகள் இருந்ததை இக்குழுவினர் கண்டுபிடித்தனர். மில்லரின் ஆய்வு சேதனையிலிருந்து இன்னும் அதிகம் கற்க வேண்டியுள்ளது. அவருடைய பரிசோதனை பற்றி புத்தகங்கள் மூலம் அறியவந்துள்ளோம். எரிமலை உருவாவதற்கான தோற்றத்தை பெற பயன்படுத்தப்பட்ட கருவி பலவித சேர்மங்களை உருவாக்கியுள்ளது என்று கூறும் இந்த அறிவியலாளர்கள் தாங்கள் மேற்கொண்ட மீளாய்வு முடிவுகளை அக்டோபர் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.

மில்லர் மீத்தேன், ஹைட்ரஜன், அமோனியா போன்றவற்றை தன்னுடைய சோதனைகளில் பயன்படுத்தினார். ஆனால் புதிய ஆய்வாளர்கள் பூமியின் தொடக்க நிலையில் அதிகமாக கரியமிலவாயு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆகியவை இருந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். அண்டவெளியின் அளப்பரிய தூரங்களில் உயிரினை உருவாக்கும் மூலக்கூறுகளை விண்வெளி ஆய்ச்சியாளர்கள் அறிந்திருக்கும் அதேவேளை, பூமியின் அடி ஆழங்களில் உயிரின் இருப்பினை புவியியலாளர்களும், உயிரியலாளர்களும் ஆய்ந்தறிந்துள்ளனர். உதாரணமாக எரிமலைத்தன்மைக் கொண்ட கடல்படுகைகளில் 306 டிகிரி வெப்பத்திலும் கூட நுண்ணுயிரிகள் வாழ்வதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீர் மற்றும் கரியமிலவாயுக்கு பதிலாக எரிமலை வெடிப்புகளும், ஹைட்ரஜன் மற்றும் மீத்தேன் வாயுக்களை வெளியேற்றுகிறது. எரிமலை குழம்பு பனித்துகள்களோடு மோதும்போது மின்பொறி ஏற்படுவதால் அதிலும் மின்னல் நிறைந்திருக்கிறது. எனவே, எரிமலை வெடிப்புகள் மூலம் இவ்வுலகில் உயிர் கனிந்திருக்கலாம் என்று வட அமெரிக்கவின் மேரிலாண்ட் மாநிலத்தின் Greenbelt லுள்ள நாசாவின் Goddard விண்வெளி மையக்குழு உறுப்பினர் டேனியேல் கிளாவின் தெரிவித்திருக்கிறார்.

உயிரினங்களின் தோற்றம் குறித்து ஆய்வுக்கு புலப்படாதவை அதிகமாக அதிகமாக உயிரின சுற்றுச்சூழலின் உயர்வான தனித்தன்மையை ஆழமாக உணர்கின்றோம். இத்தகைய ஒப்பற்ற உயிரின சூழலை போற்றி பாதுகாப்பதன் அவசியத்தையும் அறிகின்றோம். நமதுயிரை காக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் சிலவற்றில், பிற உயிரினங்களையும் காக்க பயன்படுத்தினால், அது மாபெரும் மாற்றத்தை கொண்டுவரும்.


1 2