• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-09 10:43:55    
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி

cri
உள்ளூர் நேரப்படி பிப்ரவரி முதல் நாளிரவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஸ்பெயின் வீரர் ராஃபே நடால், 3-2 என்று ஆட்டக்கணக்கில் புகழ்பெற்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து, ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக பெற்றார். தோல்வியடைந்த பின், ரோஜார் ஃபெடரர் டென்னிஸ் உலகின் சாதனைப்பவிவை சமன் செய்ய முடியாமல், போனதை எண்ணி கண்ணீர் விட்டது. விளையாட்டரங்கிலுள்ள ரசிகர்களை மனமுருகச் செய்தது.

சர்வதேச ஆடவர் தொழில் முறை டென்னிஸ் சம்மேளனம் 2ம் நாள் ஆடவர் ஒற்றையர் புதிய தரவரிசையை வெளியிட்டது. இப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், முதலிடம் வகிக்கின்றார். ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 2வது இடத்தை வகிக்கிறார்.
உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ம் நாள் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் புகழ்பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-0 என்ற ஆட்டக்கணக்கில் ரஷியாவின் சாஃபீனவை தோற்கடித்து, 4வது முறையாக இச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். இது அவர் பெற்ற 10வது கிரான்ட் ஸ்லாம் எனும் புகழ்பெற்ற சாம்பியன் பட்டமாகும். உலக டென்னிஸ் வீராங்கனையின் தரவரிசையில் 3வது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச சதுரங்க உயர் நிலைப்போட்டி ஒருங்கிணைப்புக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, சீன சதுரங்க போட்டி 2ம் நாள், ஆசியாவின் முதல் சர்வதேச உயர்நிலை சதுரங்க போட்டியாக மாறியுள்ளது. இப்போட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 27ம் நாள் முதல், அக்டோபர் 9ம் நாள் வரை நடைபெறுகின்றது.
சர்வேதச உயர்நிலை சதுரங்க போட்டி, உலகில் புதிதாக உருவாகியுள்ள ஓர் உயர்நிலை சதுரங்க போட்டியாகும். சர்வதேச சதுரங்க உயர்நிலைப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கிய, கிரான்ட் ஸ்லாம் என்ற புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியை போன்ற உலக உச்சநிலை சதுரங்க ஆட்டப்போட்டி, இப்போட்டியாகும்.

2ம் நாள், சர்வதேச கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிபர சம்மேளனம், மிகப் புதிய உலக கால்பந்தாட்ட மன்றங்களின் தரவரிசையை வெளியிட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் அணி, இதில் முதலிடம் வகிக்கிறது. ஜெர்மனியின் பாயெர்ன் முன்ச்சென் அணியும், ஸ்பெயினின் பார்சலோனா அணியும் 2வது மற்றும் 3வது இடத்தை வகிக்கின்றன.