• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 17:04:59    
புத்தாண்டில் சீன அரசுத் தலைவரின் முதல் பயணம்

cri
சௌதி அரேபியா, மாலி, செனகல், தான்சானியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில், அரசு முறைப் பயணம் மேற்கொள்ள, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், 10ம் நாள் நண்பகல், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். 8 நாட்கள் நீடிக்கும் இந்த ஆசிய-ஐரோப்பிய பயணம், புத்தாண்டில் சீன அரசுத் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் Zhai Juan, அண்மையில் இது குறித்து செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது, சீனாவின் இந்த 5 நாடுகளுடனான உறவை வெகுவாகப் பாராட்டினார்.

இப்பயணத்தின் மூலம், சௌதி அரேபியாவுடனான உத்திநோக்கு நட்புறவை வலுப்படுத்தி, வளைகுடா ஒத்துழைப்பு அவையுடனான கூட்டு ஒத்துழைப்புகளையும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டு சாதனைகளின் கடைசிக் கட்ட நடைமுறையாக்கத்தையும் முன்னேற்ற வேண்டும். சீன-ஆப்பிரிக்க புதிய ரக உத்திநோக்குக் கூட்டாளி உறவை மேலும் ஆழமாக்கி, ஆப்பிரிக்காவின் இந்த 4 நாடுகளுடனான நட்பார்ந்த ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

சௌதி அரேபியா, இப்பயணத்தில் ஹூசிந்தாவ் செல்லும் முதல் நாடாகும். இரு தரப்புறவு நிறுவப்பட்டு, 10 ஆண்டுகளே ஆகியிருந்த போதிலும், இரு நாட்டுறவு விரைவாக வளர்ந்து வருகிறது. சீனா சௌதி அரேபியாவுடன் உத்திநோக்கு நட்புறவை நிறுவியுள்ளது. பல ஆண்டுகளாக, சௌதி அரேபியா, மேற்கு ஆசிய-ஆப்பிரிக்கப் பிரதேசத்தில் சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. அத்துடன், சீனா அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்த எண்ணெய் அளவும் மிக அதிகமாகும். அந்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் போது, சீனத் தொழில் நிறுவனங்கள் கட்டியமைத்துப் பொறுப்பேற்ற காரை உற்பத்தித் திட்டப்பணியை ஹூசிந்தாவ் பார்வையிடுவார் என்று Zhai Juan கூறினார்.

சீனா வளைகுடா ஒத்துழைப்பு அவையுடனான கூட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது பற்றி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, ஹூசிந்தாவ் அதன் தலைமைச்செயலாளர் Abdul Rahman al-Attiyahஐச் சந்தித்துரையாடுவார் என்றும் Zhai Juan தெரிவித்தார்.

சர்வதேச நிதி நெருக்கடி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள சீனாவின் சில தொழில் நிறுவனங்களின் இயக்கத்தில் எதிர்நோக்கப்படும் இன்னல்களை குறித்து சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாதிப்பைக் குறைக்க, சீனா, சில நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இந்த அறைகூவல்களை கூட்டாகச் சமாளிக்கும்.

சீன-ஆப்பிரிக்க உறவை முன்னேற்றுவதற்காக, அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் அறிவித்த 8 நடவடிக்கைகளை, சீனா பெரிதும் செயல்படுத்தும். திட்டப்படி, ஆப்பிரிக்காவுக்கான மீட்புதவி குறித்த வாக்குறுதியை சீனா சிறப்பாக செயல்படுத்தி, சீனத் தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து, அங்கு தொழில் புரிவதைத் தொடர்ந்து ஊக்குவித்து ஆதரித்து வருகிறது. இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், நிதி நெருக்கடி சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பில் ஏற்படுத்தும் பாதிப்பை தங்குதடையின்றி சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இந்த 5 ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள், 2009ம் ஆண்டு ஹூசிந்தாவ் பயணம் மேற்கொள்ளும் முதல் தொகுதி நாடுகளாகும். சீனா, வளரும் நாடுகளுடனான உறவில் கவனம் செலுத்துவதை இது மீண்டும் நிரூபிக்கிறது என்று சீன நவீன சர்வதேச உறவு ஆய்வகத்தின் ஆசிய-ஆப்பிரிக்க ஆய்வகத்தின் துணைத் தலைவர் Xu Weizhong தெரிவித்தார்.

வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, சீனாவின் நன்மைக்குப் பொருந்தியது. அத்துடன், பெரும்பாலான வளரும் நாடுகளின் நன்மைக்கும் பொருந்தியது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.