• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 17:16:09    
லோங் மென் குகை

cri

லோங் மென் கற்குகை, சீனாவிலுள்ள 4 பெரிய கற்குகைகளில் ஒன்றாகும். அது, சீனாவின் ஹேநான் மாநிலத்திலுள்ள லுவோயாங் நகரின் தெற்குப் பகுதிக்கு தெற்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஹான் வம்சக்காலத்திற்குப் பின், அது, லோங் மென் எனவும், யி ச்சுயே எனவும் அழைக்கப்பட்டது. அந்த காட்சியிடம், லுவொயாங்கின் எட்டு முக்கிய காட்சி இடங்களில் முதலிடம் வகிக்கிறது.

அது, வடக்குவெய் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. பிந்திய 400 ஆண்டுகாலத்தில், அது, செதுக்கப்பட்டு வருகிறது. பழங்காலத்தின் சிற்பிகள், அங்கு கோயில்களைச் செதுக்கி, அதை புகழ்பெற்ற கற்சிலைக் கலையின் கருவூலமாக மாற்றினர். இக்குகையின் தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையிலான தூரம், ஒரு கிலோமீட்டராகும். கல்வெட்டுகள் போன்றவற்றின் எண்ணிக்கை 3600க்கு மேலாகும். அங்கு, 50 புத்த கோபுரங்களும், ஒரு இலட்சம் புத்தர் சிலைகளும் இருக்கின்றன.

அங்கு, மதம், நுண்கலை, கை எழுத்து, இசை, ஆடை, மருத்துவம், கட்டிடம், உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து முதலிய துறைகளிலான வரலாற்றுச் சிறப்பு மிகு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனால், அது, பெரிய கல் செதுக்கல் அருங்காட்சியகமாகவுள்ளது.

அது, கான்சூ மாநிலத்தின் துன்ஹுவாங்கிலான மொகௌ கற்குகை, ஷான்சி மாநிலத்தின் யூன்காங் கற்குகை ஆகியவை, சீனாவின் மூன்று பெரிய கல் செதுக்கல் கலைக் கருவூலங்கள் என அழைக்கப்படுகின்றன.

லோங் மென் கற்குகை, சீனாவின் முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.