• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 16:51:41    
2 முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பாரிஸ் நகரம்

cri
நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மறுமலர்ச்சி துவங்கிய நகரமாகவும், நவீன ஒலிம்பிக்கின் தந்தை Pierre de Coubertin இன் சொந்த ஊராகவும் பாரிஸ் திகழ்கின்றது. இது மட்டுமல்ல வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இரண்டு முறை நடத்தப்பட்ட ஒரேயொரு நகரம் இதுவாகும்.

1900ம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2வது நவீன ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. ஆனால், பாரிஸில் முதலாவது ஒலிம்பிக் விளையாட்டை போட்டியை நடத்த வேண்டும் என்று நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக அழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு Pierre de Coubertin விரும்பியிருந்தது பற்றி அறிந்தவர்கள் மிக குறைவு. பிரான்ஸின் ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்று நிபுணரும், பிரான்ஸ் தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தின் நிறுவனருமான Jean Durry இது பற்றி கூறியதாவது

உரை 1

இது குறித்து அப்போதைய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஒரு விதி உண்டு. அதாவது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரது ஊரில் நடைபெற வேண்டும். கிரேக்க நாட்டவர் Denetrius Vilelas, அப்போதைய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராவார். Pierre de Coubertin அப்போதைய தலைமைச் செயலாளர் ஆவார். ஆகையால், முதலாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி கிரேக்கத்தில் நடைபெற்றது. பிரான்ஸில் 2வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த, 1896ம் ஆண்டு முதலாவது போட்டி நிறைவடைந்தவுடனே, Pierre de Coubertin கிரேக்க மன்னருக்கு கடிதம் எழுதி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்கும் விண்ணப்பதை தெரிவித்தார். ஆகையால், 2வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பாரிஸில் நடைபெற்றது என்றார் அவர்.

1900ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் திங்கள் வரை, 2வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அதேவேளையில், பாரிஸ் உலகப் பொருட்காட்சியையும் நடத்தியது. உலகப் பொருட்காட்சியுடன் ஒரு மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியை நடத்த Pierre de Coubertin விரும்பியிருந்தார். ஆனால், நிலைமை அவர் விருப்பத்தின் படி வளரவில்லை. Jean Durry இது பற்றி கூறியதாவது,

உரை 2

பிரான்ஸ் தொழில் மற்றும் வணிகத் துறை ஏற்பாடு செய்த உலகப் பொருட்களாட்சி சிறப்பாக நடைபெற்றது. ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்வாக்கு தெளிவாகக் உணரப்படவில்லை. முழு போட்டி காலத்திலும், பாரிஸில் ஒலிம்பிக் சின்னம் காணப்படவில்லை. பிரச்சார அட்டையில் கூட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி எதுவும் காணப்படவில்லை. அனைவரும் இதனை சர்வதேச விளையாட்டுப் போட்டியாக அழைத்தனர். அப்போது மக்கள் ஒலிம்பிக் பற்றி நன்றாக அறிந்து கொள்ளவில்லை. அந்தப்போட்டி மக்களின் ஆர்வத்தை ஈர்க்கவில்லை என்றார் அவர்.

காதல் கொட்டும் ரம்மியமான நகரான பாரிஸில் 2வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அதிக மக்களின் வரவேற்பை பெறாததால் Pierre de Coubertin வருத்தம் அடைந்தார். ஆனால், பிரெஞ்சு மக்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மீது ஆர்வம் காட்டுவர் என்றும் இந்த போட்டியின் அற்புதம் பிரான்ஸில் பரவலாவது உறுதி என்றும் அவர் திடமாக நம்பினார். காலம் கடந்த, நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விரைவாக வளர்ந்தன. 1924ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மறு மலர்ச்சி அடைந்த 30வது ஆண்டு நிறைவாகும். இதனை ஆரம்பித்தவரும், விரைவில் பதவி விலகவிருந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான Pierre de Coubertin, விளையாட்டுத் துறையில் ஈட்டிய சாதனையைப் பாராட்டும் வகையில், 8வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்த ஆம்ஸ்டர்டாம், பார்சலோனா, லாஸ் ஏஞ்சல்ஸ், பிராக், ரோம், பாரிஸ் ஆகிய 6 நகரங்களில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பாரிஸை மீண்டும் தேர்ந்தெடுத்தது. ஆகையால், வரலாற்றில் 2 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஒரேயொரு நகரமாக பாரிஸ் மாறியது. இம்முறை, பிரெஞ்சு மக்கள் முன்கண்டிராத ஆக்கப்பூர்வ மனப்பாங்மையையும் ஆர்வத்தையும் காட்டினர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில், மக்கள் அனைவரும் இதற்கான முன்மொழிவுகளை வழங்கினர். பாரிஸ் ஒலிம்பிக் அமைப்புக் குழுவும் பல இன்னல்களைச் சமாளித்து, நிதியைத் திரட்டி, 60 ஆயிரம் ரசிகர்கள் இடம்பெறக் கூடிய கொலம்பஸ் விளையாட்டு அரங்கைக் கட்டியமைத்தது. மேலும், சிறப்பு வரைவமைப்புடன் விளையாட்டு வீரர்களுக்காகக் குளியல் மற்றும் கழிவறை வசதிகளைக் கொண்ட மர வீடுகளையும் கட்டியமைத்தது. அதன் விளைவாக விளையாட்டு வீரர்களின் நீண்ட தூரப் போக்குவரத்து போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. படிப்படியாக விளையாட்டு வீரர்கள் குழுமி வசிக்கும் இந்த வடிவம் ஒலிம்பிக் கிராமமாக மாறியது. Jean Durry மேலும் கூறியதாவது

உரை 3

அப்போதைய ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் குறைவு. எல்லா வீடுகளும் மர வீடுகளாகும். 1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போதைய ஒலிம்பிக் கிராமத்துடன் இதை ஒப்பிட முடியாது. ஆனால், இது விளையாட்டு அரங்குகளின் அருகில் கட்டியமைக்கப்பட்டது. ஆகையால், விளையாட்டு வீரர்களின் போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்பட்டது. அவர்களின் வரவேற்பை பெற்றது. மேலும், கொலம்பஸ் விளையாட்டு அரங்கில் முதன்முதலாக ஊது குழல் மூலம் விளையாட்டு வீரர்களின் வெற்றி பற்றி அறிவிக்கப்பட்டது. இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் ஒரு மாபெரும் தொழில் நுட்ப முன்னேற்றமாகும் என்றார் அவர்.

இது மட்டுமல்ல, பாரிஸ் கலைஞர்கள் மிகவும் கவனமாக முதலாவது ஒலிம்பிக் சின்ன வில்லையை வடிவமைத்தனர். அந்தப் போட்டியின் நிறைவு விழாவில் முதன்முதலாக கொடி ஏற்ற விழா நடைபெற்றது. இதில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உபசரிப்பு நாடான பிரான்ஸ் மற்றும் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடான நெதர்லாந்தின் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. இதன் மூலம், இணக்கமான ஒலிம்பிக் குடும்பம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது. 1924ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 8வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாபெரும் வெற்றி பெற்றது என்று கூறலாம்.