க்ளீட்டஸ் –இன்று வாணி க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். வாணி – கோழி இறைச்சி நிறைந்த ஒரு உணவு வகை பற்றி கூறுகின்றோம். க்ளீட்டஸ் – முந்தைய நிகழ்ச்சிகளில் கோழி இறைச்சி இடம்பெறும் பல உணவு வகைகள் பற்றி அறிமுகப்படுத்தினோம். வாணி – ஆமாம். ஆனால், இன்றைய உணவு வகையில் இன்னொரு முக்கிய உணவுப் பொருள் இடம்பெறும். க்ளீட்டஸ் – ஓ, என்னது? வாணி – சந்தையில் அடிக்கடி பூசணிக்காய் வாங்குகின்றேன். அதன் நிறம் பொன் நிறமாகும். சுவை மிகவும் இனிப்பானது. ஆனால், கூடுதலான சர்க்கரை உட்கொள்வது பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல உணவு வகை தான். க்ளீட்டஸ் – நீங்கள் சொன்னது சரி. இன்றைய உணவு வகையில் பூசணிக்காய் முக்கிய இடம்பெறும் என்று நினைக்கின்றேன். வாணி – ஆமாம். முதலில், தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன். கோழி இறைச்சி 400 கிராம் பூசணிக்காய் 300 கிராம் வெங்காயம் 40 கிராம் இஞ்சி போதிய அளவு வெங்காயத் தழை சிறிதளவு சோயா சாஸ் 2 தேக்கரண்டி சமையல் மது 1 தேக்கரண்டி உணவு எண்ணெய் 1 தேக்கரண்டி கற்கண்டு 1 தேக்கரண்டி வாணி – முதலில், வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கும் போது, அதிலிருந்து கண்ணீர் வடிய செய்யும் நீர் வெளியேறும். அதனை சமாளிக்கும் வடிவம் பற்றி கடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளோம். க்ளீட்டஸ், நீங்கள் மீண்டும் நேயர்களிடம் தெரிவிக்க முடியுமா?
க்ளீட்டஸ் – கண்டிப்பாக. எளிதான அந்த உத்தியை எடுத்துக்கூறுகின்றேன். வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் அதை நீரில் போட்டால், அந்த கண்ணீரை வர வைக்கும் பொருல் அதில் கரைந்து போகும். ஆகையால், வெங்காயத்தை நறுக்கும் போது, பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தயாராக வைத்துக் கொண்டு அரிய தொடங்குங்கள், சரியா! வாணி – நன்றி. க்ளீட்டஸ். அடுத்து, நாம் பூசனிகாயின் தோலையும் விதைகளையும் நீக்க வேண்டும். பிறகு. பூசனிகாயை 4 சென்டி மீட்டர் அளவிலான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். க்ளீட்டஸ் – கோழி இறைச்சியை சுத்தம் செய்ய வேண்டும். பின், அதனையும் வெங்காய தழையையும் சரியான அளவாக வெட்டிக்கொள்ளுங்கள். இஞ்சியை மிகச் சிறிய அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில் உணவு எண்ணெயை ஊற்றலாம். முறையே, வெங்காயம், வெங்காய தழை, இஞ்சி ஆகியவற்றை கொட்டி, வதக்கவும். மணம் வந்த பிறகு, கோழி இறைச்சித் துண்டுகளை வாணலியில் கொட்டி, வதக்கலாம். க்ளீட்டஸ் – சில நிமிடங்களுக்கு பிறகு, கோழி இறைச்சியின் நிறம் வெள்ளையாக மாறும். அப்போது, சமையல் மது, சோயா சாஸ், கற்கண்டு ஆகியவற்றை அவற்றில் சேர்க்கலாம். இறுதியில், பூசணிக்காய் துண்டுகளை அதில் கொட்டலாம். 1.5 லிட்டர் வெந்நீரை வாணலியில் ஊற்ற வேண்டும். அடுத்து வாணலியை மூடி விடுங்கள். வாணி – அதிக சூட்டில் வாணலியிலுள்ள பொருட்களை கொதிக்க வையுங்கள். பிறகு, மிதமான சூட்டில் 40 நிமிடங்கள் தொடர்ந்து வேக வையுங்கள்.
க்ளீட்டஸ் – கடைசியில், வாணலியில் கொஞ்சம் உப்பு போடுங்கள். நன்றாக வெந்த பிறகு, அதிக சூட்டில் வாணலியிலுள்ள கூடுதலான சூப்பை காய்ச்சவும். வாணி – இப்போது, பூசணிக்காய், கோழி இறைச்சி ஆகியவை கலந்த உணவு வகை தயார். க்ளீட்டஸ் – சீனாவில் ஒரு பழமொழி உள்ளது. சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சிறிய நோயை நீக்கலாம் என்பதே அதன் பொருள். வாணி – சீன பழமொழிகள் பற்றி நீங்கள் நன்றாக அறிந்து கொண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள். க்ளீட்டஸ் – நன்றி, இன்றைய உணவு வகையின் பயன் பற்றியும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
வாணி – கண்டிப்பாக, உடலுக்குள் பாயும் ச்சி எனும் ஆற்றலை சீராக்குவது அதன் பயனாகும். அதாவது, வேலை அல்லது வாழ்க்கையில் அதிக நிர்பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அது துணை புரியும். க்ளீட்டஸ் – அப்படியா, நல்ல பயனுள்ள உணவு தான்.
|