• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 10:36:19    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: உங்களது எண்ணங்களின் வண்ணமயமான தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: தொடரும் உங்கள் அனைவரது கடித மற்றும் மின்னஞ்சல் வழி ஆதரவுக்கு நன்றிகள்.
கலை: நண்பர்களே எமது நிகழ்ச்சிகளை வழமைபோல் தவறாமல் கேளுங்கள். கேட்பதோடு நில்லாமல் நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு மறக்காமல் எழுதியனுப்புங்கள்.
க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் இயன்றவரை நேயர் நேரம் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வோம்.
கலை: உற்சாகத்தோடு எழுதுங்கள், உங்கள் கடிதங்களும் மின்னஞ்சல்களும்தான் எங்களை உவப்படையச் செய்பவை என்பதை மறக்க வேண்டாம். இனி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்.

கடிதப்பகுதி
கலை: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம் வேலூர் கு. ராமமூர்த்தி எழுதியது. 7வது ஆசிய ஐரோப்பிய உச்சிமாநாட்டில், எரியாற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நலன் போன்றவை குறித்து இவ்வுச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளின் மூலம் சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகளையும், சீனா இதற்கு உரிய பங்காற்ற வேண்டுமென அமெரிக்கா கேட்டுக்கொண்டதையும் அறிந்து வியப்படைந்தேன்.
க்ளீட்டஸ்: இலங்கை, காத்தான்குடி ம. ய. பா. மன்சா எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். சில வேளை தவறவிட்டாலும், நண்பரிகளிடம் கேட்டு நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்துகொள்வேன். நேயர்களிடம் நீங்கள் காட்டும் அன்பும், ஈடுபாடும் என் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.


கலை: அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ராட்சத பாண்டா பற்றி கூறுவதாக குறிப்பிட்டதுமே எங்களுக்கு மகிழ்ச்சி. முன்பே பாண்டாவை பற்றி சில தகவல்களை நமது நிகழ்ச்சிகளிலும், சீனப் பயணம் சென்ற நண்பர்களின் நேரடி அனுபவப் பகிர்வுகளிலும் கேட்ட எங்களுக்கு, பாண்டா என்றதும் ஒரு வித ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது. செங்தூ ஆய்வு மையத்தை பற்றியும், பாண்டாவின் உடலியல் மற்றும் வாழ்க்கை பற்றியும் நிகழ்ச்சியில் நல்ல தகவல்கள் இடம் பெற்றன.


க்ளீட்டஸ்: குமரி மாவட்டம் இலவுவிளை ஜெயராஜ் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை இரவில் கேட்க முடியாவிட்டாலும் மறுநாள் காலையில் மறுஒலிபரப்பில் கேட்க முடிவதால் தவறாமல் நிகழ்ச்சிகளை கேட்க முடிகிறது. நவம்பர் 30ம் நாள் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் சிறப்பாக இருந்தன. நாட்டுப்புறப் பாடல்களான அவை சீனாவின் தேசிய இனத் தனித்தன்மையுடையவை என்பதை அறிய முடிந்தது.
கலை: சென்னை 17 என் ராஜேந்திரன் எழுதிய கடிதம். சிந்தைக்கு விருந்து படைக்கும் சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். சீனாவில் இன்பப் பயணம், மக்கள் சீனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சீனாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் மக்களை பற்றி சிறப்பாக அறிந்துகொள்ள முடிகிறது. நேயர் நேரம் நிகழ்ச்சியில் கடிதங்களும், மின்னஞ்சல்களும் இடம்பெறுவதால், வாரம் இருமுறை வழங்கினால் சிறப்பாக இருக்கும் அல்லவா?
நேயர்கள் பலரிடத்தில் இந்த எதிர்பார்ப்பும், கருத்தும் நிலவுகிறது. எனவே, இதை நாங்கள் நிச்சயம் கருத்தில் கொள்வோம். ஆனால் அனைவரும் ஏற்கனவே அறிந்தது போல், இது போன்ற மாற்றங்களை நாம் உடனே செய்து விடமுடியாது. இது ஒரு நீண்ட நெடிய நிர்வாக நடைமுறைக்கு பிறகே முடிவாகக்கூடும். அதேவேளையில் தாராள கருத்து பொருட்களும் உங்களிடமிருந்து பெற வேண்டும்.
க்ளீட்டஸ்: தாசப்பகவுண்டன்புதூர் எஸ். சுதர்ஷன் எழுதிய கடிதம். சென்னையிலிருந்து முனைவர் கடிகாசலம் அவர்கள் வழங்கும் செய்திகள் சிறப்பு. அண்மையில் நாமக்கல்லிலிருந்து அரபு வளைகுடாவுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவது பற்றி விரிவாக கூறினார். ஏற்றுமதியின் காரணம் உள்நாட்டில் முட்டையின் விலை சற்றே அதிகரித்துள்ளது.
கலை: அடுத்து, தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். வாரந்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் பல வகை விளையாட்டுப் போட்டிகளை பற்றிய செய்திகளை விளையாட்டுச் செய்திகள் மூலம் அறிந்துகொள்கிறோம். பல்வகை விளையாட்டுகளின் முக்கிய விதிமுறைகள், வீரர்களின் தனிப்பட்ட திறமைகள் முதலியவற்றை அறியத்தரும் சீன வானொலிக்கு நன்றி.


க்ளீட்டஸ்: தலைநாயர், பரசலூர் பி. எஸ். சேகர் எழுதிய கடிதம். செய்திகளில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தின் கௌஹாத்தி நகரில் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்பு பற்றி அறிந்தோம். தலைமையமைச்சர், குடியரசுத்தலைவர் ஆகியோர் இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அழிவை ஏற்படுத்தும் வன்முறையும், பயங்கரவாதமும் எங்கிருந்தாலும் ஒடுக்கப்படவேண்டும்.