• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-11 11:11:07    
விளையாட்டு போட்டிகள் மீதான சீன மக்களின் மாபெரும் உற்சாகம் 1

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதுடன், விளையாட்டுப் போட்டிகள் மீது தீவிரமாகியுள்ள சீன மக்களின் மாபெரும் உற்சாகம் என்பது பற்றி கூறுகின்றோம். உண்மையில் இதுவரை நடைபெறாத மிகவும் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் முடிவடைந்த போதிலும், அதனால் தூண்டப்பட்ட உற்சாகம் முடிவடையவில்லை. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், மேலும் கூடுதலான சீன மக்கள் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ச்சி கொள்ள துவங்கியுள்ளனர்.
பெய்சிங்கிற்கு செழுமையான விளையாட்டு மூல வளத்தை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆழப்பதித்துள்ளது. பெய்சிங்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் மிதிவண்டி மற்றும் வாள்வீச்சு நிர்வாக மையம் Lao Shan மிதிவண்டி அரங்கான நவீனமயமான ஒலிம்பிக்

விலையாட்டு திடல்களும் அரங்குகளும், உடல் பயிற்சி மையம், உள்ளரங்க நீச்சல் மையம், பூப்பந்து மிதிவண்டி ஆகிய விளையாட்டு மூலவளங்களை நிர்வகித்தது. ஒவ்வொரு புதன்கிழமையிலும், தனது நண்பர்களுடன், பெய்சிங் நகரவாசி Li Feng மிதிவண்டி மற்றும் வாள்வீச்சு நிர்வாக மையத்துக்குச் சென்று, உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இந்த அரங்கு மிதிவண்டி போட்டியை நடத்தியதால், மூடப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், மேலும் கூடுதலான நகரவாசிகள் அங்கே சென்று, உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்றார் அவர்.

குளிர்காலத்திலும், விளையாட்டுப் போட்டியில் பெய்சிங் நகரவாசிகளின் உற்சாகம் குறையவில்லை. பனிசறுக்கு நடனம், பனிச்சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் மேலதிக பெய்சிங் நகரவாசிகள் பங்கெடுத்தனர். குறிப்பாக, பெய்சிங்கில் பனிச்சறுக்கில் பங்கெடுத்த மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தது. பெய்சிங் பனிச்சறுக்கு இடங்களின் எண்ணிக்கை 1999ம் ஆண்டு ஒன்றாக இருந்ததிலிருந்து 2008ம் ஆண்டு 16ஆக அதிகரித்துள்ளது. ஆனால், குளிர்கால நீச்சல் விளையாட்டை பெய்சிங் நகரவாசிகள் மேலும் அதிக மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.