
2002ம் ஆண்டு இப்பூங்கா கட்டியமைக்கப்பட்டது. அப்போது, நடைப்பாதையை அமைப்பதற்காக, சில மரங்களை வெட்ட நேரிட்டது. தேவைக்கு அதிகமாக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்பூங்காவில், வட வண்டி இல்லை. கடையில்லை. பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி இல்லை. குப்பைக் கூளப்பெட்டி கூட மரத்துண்டால் ஆனது. இதனால், பூங்காவின் அடிப்படை வசதியும் இயற்கைச் சூழலும் பின்னிப் பிணைந்துள்ளன. கன்னிக்காட்டின் நிலைமை, கூடிய அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில், கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்துக்கும் மிகவும் தாழ்வான இடத்துக்குமிடையிலான இடைவெளி 800 மீட்டராகும். பூங்காவின் வளைவு சுளிவான நடைப்பாதை, மலை நெடுகிலும் கட்டப்பட்டது. ஒரு பக்கம் செங்குத்தான மலையும் மற்றொரு பக்கம் செங்குத்துப் பாறையும் காணப்படுகின்றன. மலைப்பாதை குறுகலானது. மிகவும் அகலமான இடத்தில் 2 பேர் ஒன்றாகு நடக்க முடியாது. மிகவும் குறுகலான இடத்தில் ஒருவர் மட்டும் சாய்ந்து நடக்க நேரிடும்.

|