• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-12 18:36:22    
மின்னஞ்சல்

cri

......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......

ஜனவரித் திங்கள் முதல் நாள் இடம்பெற்ற சீன வானொலி இயக்குநர் வாங்கெங் நியன் அவர்கள் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துரையைக் கேட்டு மகிழ்ந்தேன். முதலில், உலகெங்கும் வாழும் நேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துரை வழங்கிய அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகின் பல நண்பர்கள், சீனாவின் மீது அளப்பரிய அன்பை காட்டுவதற்கு சீன வானொலி ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

சீன வானொலியின் வெற்றிக்கு பின்னே எத்தகைய மாபெரும் உழைப்பு மறைந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். சீன நண்பர்களின் கடின உழைப்பை, நேயர்கள் தங்களின் உழைப்பின் மூலம் ஈடுசெய்து நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்றுதான் நான் கருதுகின்றேன். 2009 ஆம் ஆண்டில், நண்பர்களின் உதவியுடன், மேலும் பல முன்னுதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

......விஜயமங்க‌லம் குணசிலன்......

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் திரு. செல்வம்,பல்லவி கே. பரமசிவம், ரவிச்சந்திரன், மணமேடு தேவராஜா, கலைவாணன் ராதிகா ஆகியோர் வழங்கிய வாழ்த்துச் செய்திகள் மிக சிறப்பாக இருந்தன...பாராட்டுக்கள்...

......பாண்டிச்சேரி N.பாலகுமார்......

இவ்வாண்டின் துவக்கத்தில் தமிழ்ப் பிரிவில் உள்ள அனைவரும் வழங்கிய புத்தாண்டு சிறப்பு வாழ்த்துரையை கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். சீன மக்களின் இதயத்தில் நீங்க துயரத்தை ஏற்படுத்திய சிச்சுவான் நிலநடுக்கத்தின் தாக்கம் அனைவரின் வாழ்த்துரையில் இடம்பிடித்து இருந்ததை நான் உணர்ந்தேன். உங்களுக்கு மட்டுமே ஏற்பட்ட துயரம் அல்ல நேயர்களாகிய எங்களுக்கும் ஏற்பட்ட துயரம் என்பதை நேயர்களின் வாழ்த்துரையின் மூலம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். நிகழ்ச்சியினூடகவும் தொலைபேசி மற்றும் செல்லிடபேசி வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

ஊட்டி, S.K.சுரேந்திரன்

2008=12=22 திங்கள் அன்றைய நட்புப்பாலம்

சீன வானொலியில் சிறப்புப் பரிசு பெற்று சீனாவுக்கு சென்று வந்த நேயர்களிடம் திரு.கிளிட்டஸ் அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் இரண்டாவது பகுதியைக் கேட்டேன். மூத்த நேயர்களின் அனுபவங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் சீன வானொலியில் அவர்களின் பங்களிப்பு பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

பெரியகாலப்பட்டு, ப. ஜெயச்சந்திரன்

ஜனவரித் திஙகள் எட்டாம் நாள் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்தேன். வாணி அவர்கள் தொகுத்துத் தந்த பல சுவையான தகவல்களில், சந்திர ஆய்வு வாகனம் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியது அருமை. மேலும், உலகிலேயே மிகப் பெரிய வானொலி தொலை நோக்கு கருவியை சீனா கட்டி அமைக்கப்பட்டு வருவதையும் கூறியது அருமை. சிறப்பான சீன வானொலி பல சுவையுடன் கூடிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கி வருவது பாராட்டுக்குரியது!

சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன்

தைத் திரு நாளை இவ்வாண்டு முதல் தமிழ் புத்தாண்டு நாலாக தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றேம். எனவே, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சனவரித்திங்கள் 13 ஆம் நாள் ஒலிபரப்பான சீனக் கதை நிகழ்ச்சியில் வேகவைத்த தானியங்களை எதிரி நாட்டுக்கு அனுப்பி அவர்களை விதைக்கச் சொல்லி போர் தந்திர உத்தியை கையாண்டது பற்றிய கதை இடம் பெற்றிருந்தது. இதைப் போல இந்தியாவிலும் பொன்னர் சங்கர் கதையில் வருத்த தானியங்களை விதைக்கச் சொன்னதாக கதை இருக்கிறது. இரு நாட்டுக் கதைகளும் ஒரேமாதிரியான கருத்தினைக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்

சீனாவின் வசந்த விழாவுக்கு போக்குவரத்து சேவை என்னும் செய்தித் தொகுப்பினை தேன்மொழி அவர்கள் பிழைகள் இல்லாமல் வாசிக்கக் கேட்டேன். சீன மக்களின் மிக முக்கிய பாரம்பரிய விழாவான வசந்த விழா வேளையில், சீனாவின் இருப்புப்பாதை, போக்குவரத்து நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து என அனைத்து வகை போக்குவரத்து சேவையினை சீனா துரிதப்படுத்தி, மக்கள் எவரும் பாதிக்காதபடி போக்குவரத்து நெறிகளை வரைமுறைப்படுத்தி இருப்பது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியதே! சீன மக்கள் அனைவருக்கும் தமிழகத்திலிருந்து எனது வசந்த விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி

ஜனவரி திங்கள் 12-ம' நாள் அன்று இடம் பெற்ற சீன வசந்த விழாவுக்கான போக்குவரத்து சேவை என்ற செய்தித் தொகுப்பினைக் கேட்டேன். உலகில் மிகுந்த மக்கள் தொகை கொண்ட சீனாவில் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வரும் வசந்தவிழாவினை முன்னிட்டு சீன போக்குவரத்துறை பயணிகளின் வசதிக்காக என்னென்ன நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை தெரிந்து கொண்டேன். பேருந்து, வானூர்தி, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட மூன்று சேவைகள் சிறந்த பங்களிப்பினை அளிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சீன மக்கள் அனைவரும் வசந்த விழாவினை மகிழ்ச்சி பொங்க கொண்டாட என் வாழ்த்துக்கள்.

பெரியகாலாப்பட்டு, P. சந்திரசேகரன்

இரண்டு வாரங்களாக கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் மூலமாக தமிழன்பன் மற்றும் கலையரசி அவர்கள் இணைந்து சீனாவின் பாரம்பரிய விழாவான சீன வசந்த விழாவின் அழகிய அம்சங்களை சிறப்பாக தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கி எங்களையெல்லாம் சுறு சுறுப்பாக கேட்க வைத்தார்கள். சந்திர நாட்காட்டியின்படி நடக்கும் சீன பாரம்பரிய விழாக்களின் பவனி ஒவ்வொன்றும் காண கண்கோடி வேண்டும் என்பதை அறிந்தோம்.

கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்

ஜனவரி 11ம் நாளிரவு நேயர் விருப்பம் நிகழ்ச்சியினைக் கேட்டேன். நிகழ்ச்சியில் 1)தாழையாம் பூமுடித்து 2) பழகும் தமிழே

பார்த்திபன் மகளே 3) மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ

4) காவியமா, நெஞ்சின் ஓவியமா போன்ற நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்களைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். பாடல்களைத் தெரிவு செய்த சகோதரிக்கும் ஒலிபரப்பிய சீன வானொலிக்கும் எனது பாராட்டுக்களும், நன்றியும்.

......ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்......

ஜனவரி 6ம் நாள் இடம்பெற்ற செய்திகள் மூலம் கடந்த ஆண்டு திபெத்தில் சுற்றுலா மேற்கொண்ட பயணியரின் எண்ணிக்கை 22 இலட்சமாகும் எனவும், அதன் மூலம் பெற்ற வருமானம் 220 கோடி யவானை தாண்டியது எனவும் அறிந்தேன். திபெத்தின் சுற்றுலா மூலவளங்கள், பண்பாடு மற்றும் நடையுடை பாவனைகளை அறிமுகப்படுத்தி, சுற்றுலா நினைவுப் பொருட்களின் வணிகச் சின்னத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு திபெத் சுற்றுலாவுக்கான நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதையும் அறிந்தேன். திபெத் பொருளாதாரம் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்!

வளவனூர், முத்துசிவக்குமரன்

ஜனவரி எட்டாம் நாளன்று ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் வான் தொலைநோக்கி பற்றி பல விளக்கங்கள் அளிக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் உருவாவது இந்த தொழில் நுட்பத்தில் மேலும் பல கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் சீனா நிச்சயம் நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை.