திபெத் பிரச்சினை பற்றிய சீன அரசின் நிலைப்பாட்டுக்கு சர்வதேசச் சமூகம் முழுமையாக மதிப்பு அளித்து ஆதரிக்க வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.
12ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சியாங் யூ அம்மையார் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில், தலாய் லாமாவை ஆதரிப்பது பற்றிய கூற்றை லிதுவேனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளியிட்டதுகுறித்து பேசுகையில், சீன தரப்புக்கும் தலாய் லாமாவுக்குமிடையிலான முரண்பாடு என்பது, தேசிய இன முரண்பாடு, மத மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் அல்ல, மாறாக, சீன இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டுன் தொடர்புடைய பிரச்சினையாகும் என்று அவர் கூறினார். இப்பிரச்சினையில், சீன அரசும் மக்களும் எந்த வெளிநாட்டு நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டார்கள் என்று சியாங் யூ அம்மையார் கூறினார்.
தேசிய இன பிரதேசத்தின் தன்னாட்சி அமைப்பு முறையில் சீன அரசு தொடர்ந்து ஊன்றி நின்று அதை மேம்படுத்தி, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், இதர திபெத் மக்கள் வாழும் பிரதேசங்கள் ஆகியவற்றின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரித்து பேணிக்காத்து, பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படை நலனை உத்தரவாதம் செய்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
|