• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-13 16:38:52    
மியாவ் இன மக்களின் விழாக்கள் (ஈ)

cri

முரசு வழிபாடு விழா

இது, மூதாதையரை வழிபடும் ஒரு பாரம்பரிய விழாவாகும். மியாவ் இன மக்கள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக பெருமளவில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவில் இதைத் கொண்டாடுகின்றனர். பண்டைக்கால கதைகளின்படி, மனிதர்கள் மரணமடைந்த பின், மூதாதையரின் ஊருக்கு திரும்பினால் தான், ஆமை அமைதி பெற முடியும். மூதாதையர்களின் ஊர், மரங்களுக்குள் அமைந்துள்ளது. மரத்தினால் உருவாக்கப்பட்ட முரசை, மூதாதையரின் வீடாக மியாவ் இன மக்கள் கருதுகின்றனர்.

இவ்விழாவின் போது, ஒரே மூதாதையரை கொண்ட பல தலைமுறையினர்கள் ஒன்று, அவர்களது மூதாதையர் வசிக்கின்ற முரசை வழிபடுகின்றனர். அப்போது, ஒவ்வொரு குடும்பமும், மாடு ஒன்றை வழங்கி, மாட்டு போட்டியை நடத்துகின்றனர். பின்னர், மாடுகளைக் கொன்று படைத்து வழிபாடு செய்கின்றனர். வழக்கத்தின்படி, உறவினர்களும், மாட்டு போட்டியைப் பார்த்த விருந்தினரும் போட்டியிடத்திலிருந்து விலகி செல்லக் கூடாது. மேலும் அதிகமானோர் வழியாட்டில் கலந்து கொண்டு, உபசரிப்பவர்கள் மேலும் மகிழ்ச்சியடைகின்றனர்.

Lusheng விழா

இது, மிகப் பரந்த மியாவ் இனப் பிரதேசத்தில் கொண்டாடப்படுகின்ற விழாவாகும். பழங்காலம் முதல், Lusheng என்ற இசை கருவியை இசைத்து நடனமாடுவதை செய்வதை, மியாவ் இன மக்கள் மிகவும் விரும்புகின்றனர். Lusheng விழா நடைபெற்ற போது, அருகில் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்த மக்கள், ஒரு வட்டத்தை உருவாக்கி அதற்குள் நடனமாடுகின்றனர். ஆண்கள் Lushengகளை இசைத்து நடனமாடுகின்றனர். இக்காட்சி, மிக பிரமாண்டமானது.

Tiaohua விழா

இவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், திருமணமாகாத இளைஞர்களாவர். கூட்டாக நடனமாடுவதைத் தவிர, குதிரைப் போட்டி, அம்பு எய்தல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் முதலிய போட்டிகளை ஆண்கள் நடத்துகின்றனர். மகளிர், அறிவுத்திறமை, அழகு முதலியவற்றில் போட்டி நடந்துகின்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், அதிகமாக காதலும் பெறுவார்கள்.