• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-13 10:38:41    
விளையாட்டு போட்டிகள் மீதான சீன மக்களின் மாபெரும் உற்சாகம் 2

cri
தற்போது, பெய்சிங்கில் 30 பேர் இடம்பெறும் நீச்சல் அணி உள்ளது. குளிர்காலத்தில், அவர்கள் நாள்தோறும் Kun Yu ஆற்றுக்கு சென்று, குளிர்கால நீச்சல் விளையாட்டை மேற்கொள்கின்றனர்.

90 வயதான Chen Jiadao கடந்த 30 ஆண்டுகளாக குளிர்கால நீச்சல் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக குளிர்கால நீச்சல் விளையாட்டு மாற்றியுள்ளது.
குளிர்கால நீச்சல் விளையாட்டு எங்களுக்கு மகிழ்வையும் அறைகூவலையும் வழங்கியது. சில்லென்று குளிளும் நீரில் நீந்துவது அறைகூவலாகும். ஆனால், நீண்டகால பார்வையில், குளிர்கால நீச்சல் விளையாட்டு மனித உடல் நலத்தை உயர்த்தி தெளிவான நன்மை வழங்கும் என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீனாவின் பல்வேறு பிரதேசங்களிலும் உடற்பயிற்சிக்கான உற்சாகம் தூண்டப்பட்டுள்ளது. சீன வசந்தவிழாவின் போது, விளையாட்டுத் திடல்களுக்கும் அரங்குகளுக்கும் சென்று, கட்டுக் குலையாமல் உடலை வைத்து கொள்கின்ற விழா கொண்டாட்டத்தின் முக்கியமான அம்சமாக மாற்றியுள்ளது. தற்போது, நாடு முழுவுதிலுமுள்ள மக்களிடையில் உடற்பயிற்சியை அடிக்கடி மேற்கொள்வோர் 28.2 விழுக்காடாகும். கடந்த ஆண்டின் இறுதியில், சீன தேசிய விளையாட்டு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சீன பொது மக்கள் விளையாட்டுப் போட்டியின் வளர்ச்சிக்கு சீரான வாய்ப்பை வழங்கியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், மேலதிக சீன மக்கள் விளையாட்டுனர்வையும் உடற்பயிற்சியையும் மகிழ்ச்சியோடு வளர்த்து வருகின்றனர் என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் பொது மக்களின் விவகார அலுவலகத்தின் தலைவர் Sheng Zhiguo தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீன தேசிய விளையாட்டு ஆணையம் சீன பொது மக்கள் விளையாட்டுப் பணிகளின் வளர்ச்சியை மேலும் தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.