• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-13 10:43:52    
அன்பான Wang Jin Lian அம்மையார்

cri
Wang Jin Lian அம்மையார், Jiang Xi மாநிலத்து Gan Zhou நகரின் Gan Xian மாவட்ட Sha Di வட்டத்தில் உள்ள மையப் பள்ளி ஆசிரியராக இருந்தார். இப்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, 200க்கு அதிகமான குழந்தைகளுக்கென அருமையான வீட்டை அவர் உருவாக்கியுள்ளார். குழந்தைகளின் பெற்றோர் வெளியூர்களில் வேலை செய்வதால், அவர்களுக்கு பெற்றோரின் பராமரிப்பு சரியாக கிடைக்கவில்லை. அவர் உருவாக்கிய இந்த வீடு, "ஊரில் தங்கியிருக்கும் குழந்தைகளின்" பராமரிப்பு மையமாகியுள்ளது.

தற்போது, 50க்கு அதிகமான குழந்தைகள் இம்மையத்தில் தங்கியிருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை மற்றும் கல்வியை செவ்வனே பராமரிக்கும் பொருட்டு, Wang Jin Lian அம்மையார் நாள்தோறும் விடியற்காலை 5 மணியளவில் படுக்கையை விட்டு எழுந்து, அவர்களுக்காக காலை உணவு தயாரிப்பார். குழந்தைகள் காலை உணவைச் சாப்பிட்டு விட்டு, பள்ளிக்கு சென்றவுடன், ஆடைகளை துவைத்து விட்டு காய்கறிகளை கழுவி, உணவு சமைப்பதில் சுறுசுறுப்பாகி விடுவார். இரவில், அவர் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை செய்ய பயிற்சி அளிப்பார். Wang Jin Lian அம்மையார் பேசுகையில், நாள்தோறும் தாம் சுறுசுறுப்பாக வேலை செய்யும் வேளையில் மனதில் நிறைவான உணர்வு ஏற்படுகிறது என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, கிராமங்களிலிருந்து வெளியூர்களுக்கு சென்று வேலை செய்யும் மக்கள் தொகை அதிகரிப்பதுடன், மேலதிக குழந்தைகள் கிராமங்களில் தங்கியிருந்து, பராமரிக்கப்பட முடியாத சூழல் பெருகி வருகிறது. நீண்டகாலமாக பெற்றோரிடமிருந்து பிரிந்து, வளரும் அக்குழந்தைகள் அன்பையும், குடும்பங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் பொது அறிவு கல்வியையும் இழந்ததால், பல குழந்தைகளுக்கு வெவ்வேறு அளவில் உளரீதியான பிரச்சினை ஏற்பட தொடங்கியது. எடுத்துக்காட்டாக, சில மாணவர்கள் கல்வி பயிலவோ பிறருடன் பழகவோ விரும்பவில்லை. இன்னல்கள் ஏற்படும் போது, அவர்கள் வெளிக்காட்டும் உணர்வுகளின் இருபுற எல்லைக்கு போகும் நிலை ஏற்பட்டது. பராமரிப்பு கிடைக்காத சில குழந்தைகளின் சீரற்ற செயல்பாடுகளில் Wang Jin Lian அம்மையார் கவனம் செலுத்தினார். அது முதல் அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய அவர் தன்னால் இயன்றதனைத்தையும் செய்து வருகின்றார். அவர் கூறியதாவது:
"இந்த குழந்தைகள் சிறு வயதிலேயே கெட்ட பழக்க வழக்கங்களை வளர்த்துள்ளனர். அது பற்றி வருத்தமடைகின்றேன். ஓர் ஆசிரியராக, இக்குழந்தைகளுக்கு உதவி செய்ய சில வழிமுறைகளை நாட வேண்டும்" என்றார், அவர்.
1995ஆம் ஆண்டு, Wang Jin Lian அம்மையாரின் வகுப்பில் ஒரு மாணவரின் பெற்றோர் வெளியூரில் வேலை செய்ததால், அம்மாணவர் பெரிதாக பராமரிக்கப்படவில்லை. அவரது மதிப்பெண் படிப்படியாக குறைய தொடங்கியது. Wang Jin Lian அம்மையார் அன்றாடம் அம்மாணவரைப் பராமரித்து, நாள்தோறும் வீட்டுப்படங்களை செய்ய பயிற்சி அளித்தார். இறுதியாக, மாணவனின் மதிப்பெண்கள் உயர்ந்தன. அம்மாணவனின் பெற்றோர் இது பற்றி அறிந்தவுடன், ஆசிரியர் Wang Jin Lianக்கு மிகவும் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு பல பெற்றோர் தத்தமது குழந்தைகளைப் பராமரிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர். Wang Jin Lianவின் குடும்பத்தில் ஒரு குழந்தை சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, வெளியூரில் பணி புரிந்தோர் பலர் Wang Jin Lian அம்மையாரின் வீட்டுக்குச் சென்று, தமது குழந்தைக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக் கொண்டார். 1995ஆம் ஆண்டு தொடக்கம், பெற்றோர் பராமரிப்பு கிடைக்காத குழந்தைகள் Wang Jin Lian அம்மையாரின் வீட்டில் தங்கியிருக்க தொடங்கினர். குழந்தைகளின் எண்ணிக்கை, ஒன்றிலிருந்து பத்துக்கு மேல் வரை அதிகரித்தது. எனவே Gan Xian மாவட்ட Sha Di வட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் நிறுவப்பட்டது.

குழந்தைகள் இம்மையத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். Li Xiu Zhen என்ற ஒரு குழந்தை, Wang Jin Lian அம்மையாரை, Wang அம்மா என்றழைக்கின்றார். இது பற்றி Li Xiu Zhen கூறியதாவது:
"அவர் என்னை நன்றாக பராமரிக்கின்றார். அவர் எனது அம்மா போல் இருக்கின்றார்" என்றார், அவர். அம்மையத்தில் Chen Li என்னும் ஒரு குழந்தை தங்கியிருக்கிறார். அவருக்கு 8 வயதான போது, அவரது பெற்றோர் உணவகம் நடத்த வெளியூர் சென்றனர். எனவே Chen Liக்கும் அவரது தம்பிக்கும் பராமரிப்பு கிடைக்காததால், Chen பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. Wang Jin Lian அம்மையார், Chen Li மற்றும் அவரது தம்பியை தமது வீட்டுக்கு அழைத்து வந்தார். Chen Li அதை மீளாய்வு செய்த போது கூறியதாவது:  
"நானும் எனது தம்பியும் ஆசிரியர் Wangவின் வீட்டில் பத்து ஆண்டுகளாக தங்கியிருந்தோம். ஆசிரியர் Wang, தாய் போல், எங்களைப் பராமரித்தார். ஆசிரியர் Wangவின் உதவியுடன், நுழைவுத் தேர்வு மூலம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் Wang அன்னைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றார், அவர்.
Chen Li மற்றும் அவரது தம்பியைப் போல், Kuang Jiang Huவின் மனதில், Wang Jin Lian அம்மையாரின் மேல் நன்றி உணர்வு நிறைந்திருக்கின்றது. அவர் கனிணி விளையாட்டுக்கு அடிமையாகி, அடிக்கடி பிறரோடு சண்டையிடுவதில் மூழ்கியிருந்தார். பின்னர், அவரது பெற்றோர், Wang Jin Lian அம்மையாரிடம் அவரைப் பராமரிக்க பணித்தனர். தற்போது, Kuang Jiang Hu, Gan Zhouவில் உள்ள ஒரு தொழிற்நுட்ப பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, Wang Jin Lian அம்மையார் குழந்தைகளின் அன்றாட வாழ்விலும் கல்வியிலும் கவனம் செலுத்தி, பராமரித்து வருகின்றார். இதற்கு பிரதிபலன் பெற அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. குழந்தைகளை பராமரிப்பதற்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்தை வசூரிப்பது தவிர, குழந்தைகளின் பெற்றோர் வழங்கும் பொருளாதார நட்ட ஈட்டைக்கூட அவர் நன்றியோடு மறுத்தார். அது மட்டுமல்ல, வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு அவர் உதவித்தொகை வழங்குகின்றார்.
Wang Jin Lian அம்மையாரின் சேவையை சிலர் புரிந்து கொள்ளவில்லை. அவர் திங்களுக்கு சுமார் 1700 யுவான் ஓய்வு ஊதியம் பெறுகிறார். அவரது கணவரின் வருமானம், சுமார் 3000 யுவானாகும். இப்பராமரிப்பு மையத்தை சுறுசுறுப்பாக நடத்துவதற்கு காரணமாக? Wang Jin Lian அம்மையார் கூறியதாவது:
"நான் இந்த குழந்தைகளைப் பராமரிப்பது, புகழ் அல்லது இலாபம் பெறுவதற்காக அல்ல. இந்த குழந்தைகள் உடல் நலத்தோடு வளர்ந்து, நன்றாக கல்வி பயில செய்திருப்பதே எனது மிக பெரிய மகிழ்ச்சியாகும்" என்றார், அவர்.
Wang Jin Lian அம்மையாரின் செல்வாக்குடன், அவரது குடும்பத்தினர், இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யும் வரிசையில் சேர்ந்துள்ளனர். Gan Xian மாவட்டத்தின் இடைநிலைப்பள்ளிகளிலும், துவக்க பள்ளிகளிலும், பராமரிப்பு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்ய, தாம் பராமரிப்பு மையத்தில் தொடர்ந்து வேலை செய்ய உள்ளதாக Wang Jin Lian அம்மையார் கூறினார். கடந்த மே திங்கள் 12ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பின், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அனாதைக் குழந்தைகளுக்கு இயன்ற அளவில் உதவி செய்ய Wang Jin Lian அம்மையார் திட்டமிட்டார். அவர் கூறியதாவது:
"ஆயிரம் தாய்களின் அன்பை அர்ப்பணித்து, சிச்சுவான் அனாதைக் குழந்தைகளை தத்து எடுக்கும் நடவடிக்கையில் கலந்து கொண்டேன். இரண்டொரு குழந்தைகளை தத்தெடுக்க திட்டமிடுகின்றேன். அவர்களை நன்றாக வளர்க்க விரும்புகின்றேன்" என்றார், அவர்.