2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி துவங்குவது நெருங்கி வருவதுடன் அதற்கான நிதி உதவியளவை சீன வங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பொருட்காட்சிக்கு தேவையான நகரின் அடிப்படை வசதி கட்டுமானங்களுக்கு இவ்வங்கி முழு மூச்சுடன் ஆதரவளித்து வருகின்றது. சீன வங்கியிலிருந்து 13ம் நாள் கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
இதுவரை ஷாங்காயில் சாலைகள், பாலங்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, நீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை நகரவசதி கட்டுமானங்களுக்கு சீன வங்கியின் ஷாங்காய் கிளை 4600 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது.
இதுவரை 185 நாடுகளும் 46 சர்வதேச நிறுவனங்களும் ஷாங்காய் உலக பொருட்காட்சியில் பங்கெடுக்க பதிவு செய்துள்ளன.
|