சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில், சீன மத்திய செய்தி விளக்க திரைப்பட தயாரிப்பு ஆலை தயாரித்த "கடந்த மற்றும் இன்றைய திபெத்" என்னும் விளக்க திரைப்படம், 15ம் நாள் முதல் பெய்ஜிங், ஷாங்ஹெய், தியன்ச்சின் ஆகிய மாநகரங்களின் திரையரங்குகளிலும், 17ம் நாளுக்கு பின், பல்வேறு இடங்களிலும் காண்பிக்கப்படும்
இவ்விளக்கத் திரைப்படம், மதிப்புக்குரிய பல வரலாற்று பதிவேடுகளைப் பயன்படுத்தி, வரலாற்றில், சீனாவிலிருந்து பிரிக்கப்படாத பகுதி திபெத் என்பதை வெளிக்காட்டியுள்ளது.
இவ்விளக்கத் திரைப்படம், கடந்த 50 ஆண்டுகளில் திபெதின் தலைகீழான மாற்றங்களை வெளியிட்டது என்று இதை கண்டு ரசித்த மக்கள் தெரிவித்தனர்.
"கடந்த மற்றும் இன்றைய திபெத்" என்னும் விளக்கத் திரைப்படத்தை கண்ட திரு ஃபூ வே சியென் கூறியதாவது கடந்த திபெதை விட, இன்றைய திபெத்தில், பெருமளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த காலத்தில் அடிமை அமைப்பு முறை, மக்களை கடுமையாக சுரண்டியது. இன்றைய, திபெத்தில் நவீனமயமாக்கக் கட்டுமானம் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இன்பமாக வாழ்க்கின்றனர் என்று அவர் திரைப்படத்தை மதித்து கூறினார்.
|