தான்சானியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கின்ற சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவும் தான்சானிய அரசுத் தலைவர் Jakaya Kikweteஉம் 15ம் நாள் தலைஸ்சலாம் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். தான்சானியாவுடன் இணைந்து, பாரம்பரிய நட்பை வலுப்படுத்தி, யதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு நட்பு ஒத்துழைப்புறவின் வளர்ச்சியை மேலும் தூண்டி, சீன-தான்சானிய உறவின் அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டுமென சீனா விரும்புவதாக ஹுசிந்தாவ் தெரிவித்தார்.
மாபெரும் மிக நல்ல நண்பராக சீனாவை கருதி, நட்பார்ந்த மனப்பாங்கில் தான்சானியா ஊன்றி நின்று வருகின்றது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளில், சீனா பெற்ற மாபெரும் சாதனைகளை தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் வெகுவாகப் பாராட்டின என்று Kikwete தெரிவித்தார். தான்சானியா "ஒரே சீனா" என்ற கொள்கையில் ஊன்றி நின்று வருகின்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
|