• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-16 10:28:04    
விளையாட்டு போட்டிகள் மீதான சீன மக்களின் மாபெரும் உற்சாகம் 3

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், மேலதிக சீன மக்கள் விளையாட்டுனர்வையும் உடற்பயிற்சியையும் மகிழ்ச்சியோடு வளர்த்து வருகின்றனர் என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் பொது மக்களின் விவகார அலுவலகத்தின் தலைவர் Sheng Zhiguo தெரிவித்தார்.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீன தேசிய விளையாட்டு ஆணையம் சீன பொது மக்கள் விளையாட்டுப் பணிகளின் வளர்ச்சியை மேலும் தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரிய வரலாற்று வாய்ப்பு இதுவாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் விளைவுகளின் துணை கொண்டு, பொது மக்களின் விளையாட்டு தொடர்பான வளர்ச்சியை தூண்ட பாடுபட வேண்டும் என்றார் அவர்.
சீன அரசு அவையின் அங்கீகாரத்துடன், 2009ம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 8ம் நாள்

சீனாவின் பொது மக்கள் உடற்பயிற்சி நாளாக மாறும். இந்த நாள் சீன மக்களின் விளையாட்டு பரவல் விழாவாக கொண்டாடப்படும். அத்துடன், சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒராண்டு நிறைவு நாளும் இதுவாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் ஆண்டு நிறைவுநாள் சீன பொது மக்களின் உடற்பயிற்சி நாளாகும் என்பது மக்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை முன்னென்றும் கண்டிராத அளவுக்கு திருப்பி பார்ப்பதற்கு துணைபுரிவதோடு, மக்கள் உடற்பயிற்சியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும் ஊக்கமளிக்கும் என்று சீன ஒலிம்பிக் குழுவின் தலைவர் Liu Peng கூறினார்.

இந்த நாள், நிறைவு நாள் மற்றும் சின்னமாகும் என்றார் அவர்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 8ம் நாள் பொது மக்கள் உடற்பயிற்சி நாளாக இருக்கும். அன்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய விளையாட்டு அரங்கான பறவைக் கூட்டில் 40 ஆயிரம் மக்கள் ஒன்றாககூடி தாய் சீ கலை உடற்பயிற்சியை மேற்கொள்வர். இந்த எண்ணிக்கை புதிய கின்னஸ் சாதனையாகி உலக சாதனையை உருவாக்கும். அன்று, சீனாவின் பல்வேறு பிரதேசங்களில், பல விளையாட்டு நடவடிக்கைகள் நடைபெறும். பெய்சிங் பொது மக்களின் விவகார பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.