• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-17 16:40:55    
ரியூய்தான் ஏரி

cri

ரியூய்தான் ஏரி, சீனாவின் தைவானில் மிகப் பெரிய இயற்கையாகவே உருவான ஏரியாகும். அது, லோங்ஹு ஏரி எனவும் அழைக்கப்படுகின்றது. அது, தனது அழகான காட்சிகளால் புகழ்பெற்றது.

இது, தைவானின் நான்தோ மாவட்டத்தின் மத்தியப் பகுதியிலுள்ள ஷுய்சூன் கிராமத்தில் உள்ளது. அதன் நீர் பரப்பு, பரந்து விரிந்துள்ளது. அதன் மொத்த பரப்பரவு, 900க்கு மேலான ஹெக்டராகும். அது கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் கீழ் நிலையில் உள்ளது.

ஏரியின் மத்தியப் பகுதியில் லாலூ என்ற தீவு இருக்கிறது. இந்தத் தீவின், வடக்குப் பகுதி, சூரியனைப் போலவும், தெற்குப் பகுதி நிலாவைப் போலவும் தோன்றுகிறது. சூரியனை, சீன மொழியில் ரி என்றும், நிலாவை யூய் என்றும் சொல்லுகின்றனர். அதனால் தான், இந்த ஏரி, ரியூய்தான் ஏரி என அழைக்கப்படுகிறது.

இங்கு நீல ஏரியும், பசும் மலைகளும் இணைந்து அழகான காட்சியை உருவாக்குகின்றன. இந்த எழில்மிக்க இயற்கைக் காட்சியைத் தவிர, Hanbilou மாளிகை, Cienta கோபுரம், Xuanzang கோபுரம் முதலிய கட்டிடங்களையும் இங்கு கண்டுகளிக்கலாம்.