திபெத்தின் சமூக இலட்சியம்
cri
இவ்வாண்டு சமூக இலட்சியத்திற்கான பணிகளில், திபெத் அரசு சுமார் 500 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிதிப் பிரிவிலிருந்து 17ம் நாள் கிடைத்த தகவல் தெரிவித்தது. இத்தொகை, கடந்த ஆண்டில் இருந்ததை விட சுமார் 50 விழுக்காடு அதிகமாகும். 340 கோடி யுவானுக்கு மேலான ஒதுக்கீடு, கல்வி இலட்சியத்தின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும். இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடுக்கு மேல் அதிகமாகும். தவிரவும், பண்பாடு மற்றும் பொதுச் சுகாதார இலட்சியங்களுக்கென திபெத் அரசு சிறப்பு நிதியை ஒதுக்கும் என்று தெரிகிறது.
|
|