• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-17 19:11:10    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பன்சன் பாபா மார்சு திங்களில், பெய்ஜிங்கில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணியை அவர் உயர்வாக மதிப்பிட்டார். அவர் கூறியதாவது

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீன மக்கள் மிகவும் முழுமையான ஆயத்தம் மேற்கொண்டுள்ளனர். அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன. ஒலிம்பிக் கிராமத்தையும் துவக்க மற்றும் நிறைவு விழாவை நடத்தவுள்ள தேசிய விளையாட்டு அரங்கையும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரலாற்றில் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக நடத்துவதற்கு சீன மக்கள் மாபெரும் முயற்சி மேற்கொண்டு வருவதை உணர்ந்துள்ளேன் என்றார் அவர்.

பெல்ஜியத்தின் ஒலிம்பிக் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் Luc Rampaer அதே கருத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது

பறவை கூடு மற்றும் நீர் கன சதுரம் முதலிய ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளையும் ஒலிம்பிக் கிராமம் போன்ற சில அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்த சீனா மாபெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்று கருதுகின்றேன். உலகில் காண்பதற்கு அரியது. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணியாளர்கள் முழு மூச்சுடன் ஆயத்தப் பணி மேற்கொண்டுள்ளனர். அடிப்படை வசதிகளின் வரையறையும் கட்டுமானமும் தலைசிறப்பானவை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை சீனா மிக சிறப்பான வசதிகளுடன் வரவேற்கும் என்றார் அவர்.

பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தாய்லாந்து ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுத் தலைவர் Thana chaiprasit கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

லிம்பிக் அரங்குகளும் திடல்களும் கட்டி முடிக்கப்பட்டன. பல்வகை ஆயத்தப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு பிரச்சினை ஒன்றும் இல்லை. தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்ட தொடர்புடைய பணிகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. சீன மொழி தவிர்த்து, அவர்கள் பல மொழிகளில் சேவை புரியலாம். அவர்களில் தாய்லாந்து மொழியைப் பேசுப்பவர் உள்ளனர் என்று கேட்டேன் என்றார் அவர்.

அரசியல் மற்றும் இதர வழிமுறைகள் மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீர்குலைக்க ஒரு சிலர் அந்தரங்க நோக்கத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். சர்வதேசச் சமூகம் இதனைக் கண்டித்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் வெட்கக் கேடானவை என்று தொடர்புடைய பிரமுகர்கள் ஒருமனதாக வலியுறுத்தினர். அரசியல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தனர். பெல்ஜியத்தின் ஒலிம்பிக் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் Luc Rampaer கூறியதாவது

அமைதி மற்றும் அன்புடன் அனைத்துலக மக்களை ஒன்றிணைப்பது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மதிப்பாகும். இந்தக் காரணத்தால் தான், சில திங்களுக்கு முன், பெய்ஜிங் ஒலிமப்க் தீபத் தொடரோட்டம் பாரிஸ், லண்டன் மற்றும் சென் புஃன்சிஸ்கோவில் சீர்குலைக்கப்பட்டது மன வருத்தம் தந்த சம்பவமாகும். ஏனென்றால், அமைதி மற்றும் அன்பை குறிக்கின்ற மனித குலத்தின் சின்னத்தை அவர்கள் தாக்கினர். நியாயமான விளையாட்டுப் போட்டிகளில், வேறுபட்ட பண்பாடு, மதம் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் பரிமாற்றத்தையும் முன்னேற்றுவது என்பது பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் குறிக்கோளாகும் என்றார் அவர்.

கானாவின் ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பன்சன் பாபா சுட்டிக்காட்டியதாவது

அரசியலை விளையாட்டுக்களிலிருந்து பிரிக்க முயற்சித்து வருகின்றோம். ஒலிம்பிக் சாசனத்தில் இத்தகைய விதி உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை வளர்க்கப் பாடுபட்டு வருகின்றோம். நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அரசியல் அம்சங்களை சேர்க்க விரும்பவில்லை. அரசியல்வாதிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கக் கூடாது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்களுக்கு வசதி வழங்க வேண்டும். விளையாட்டுக்கள், உலக ஒற்றுமையை முன்னேற்றுவதற்கான மிக பயன் தரும் வழிமுறையாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் அனைத்துலக மக்களும் ஒன்றிணைந்து, அமைதியான சூழ்நிலையில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கனிகளை அனுப்பவிக்கலாம் என்றார் அவர்.

நடைபெறவுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் இனிமையான வாழ்த்து தெரிவித்தனர். பெல்ஜிய நாடாளுமன்ற செனெட் அவையின் வெளியுறவு ஆணையத்தின் தலைவர் Marleen Temmerman அம்மையார் கூறியதாவது

சீனா, போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்துலகத்துக்கு இனிமையான வாழ்த்துரை தெரிவிக்கின்றேன். மனம் திறந்து, உலகின் இதர பிரதேசங்களின் நிகழ்வுகளை மேலும் அதிகமாக அறிந்து கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வை முயற்சியுடன் விரைவுப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் தான், உலகை மேலும் மேம்படுத்தும் உண்மையான ஒலிம்பிக் எழுச்சியை நனவாக்க முடியும் என்றார் அவர்.

பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷராப் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.