• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-17 19:49:59    
சின்னபார்

cri

நம்மூரில் முதன் முதலாக பிள்ளையை பள்ளிக்கு கொண்டு போவதற்கு முன் சாமி கும்பிட்டு விட்டு, குடும்பத்தின் மூத்தவரிடம் ஆசி பெற்று அழைத்துச் சென்று விடுவார்களே அது போல் பண்டைய சீனாவில், குழந்தைகள் முதன் முதலாக சீன எழுத்துக்களை கற்றுக்கொள்ள போகையில் சில சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. அதில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியது, சிவப்புச் சாந்தால் திலகமிட்டு அதாவது நெற்றியின் மத்தியில் பொட்டு வைத்து அனுப்புவதாகும். ஆங்கிலத்தில் சின்னபார் (cinnabar) எனப்படும் சீனச் சிவப்பு, மெர்க்குரி சல்ஃபைட் வேதியியல் பொருளாகும். இங்குலிகம் என்றும் கூறுவார்கள். நாம் பொதுவாக சிந்தூராம் என்று சொல்வதுதான் இந்த சீனச் சிவப்பு. இப்படி நெற்றியில் சிந்தூரத்தை இடுவதன் மூலம் வானுலகக் கண்ணை திறந்து, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை திறக்கின்றதாக சீனர்கள் நம்பினர். டிராகன் படகு திருவிழாவின் போது குழந்தைகளின் உள்ளங்கை, நெற்றி மற்றும் பாதங்களில் செந்நிற சிந்தூரத்தை பூசி வைப்பார்கள். இது குழந்தைகளின் அறிவை, மதிநுட்பத்தை அதிகரிக்கவேண்டும் என்ற மன்றாட்டின் வெளிப்பாடாக, அடையாளமாக கருதப்படுகிறது.

இன்னும் ஜியன்ஷு எனும் காகிதக் கத்தரிப்பு பற்றியும், எட்டு எட்டாக மனிதனின் வாழ்வை பிரித்து ஒரு தமிழ் திரைப்பாடல் வரும், சீனாவில் 12, 12ஆக மனிதனின் வாழ்க்கையை பிரித்து கூறும் தத்துவம் மற்றும் அதற்கும் செந்நிறத்துக்குமுள்ள தொடர்பு பற்றியும், செந்நிறத்தோடு ஒன்றுகலந்த நிகழ்வுகள் குறித்து அடுத்த வாரம் பண்பாடு நிகழ்ச்சியில் மேலதிக தகவல்களோடு சந்திப்போம்.


1 2