• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-17 09:50:17    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: கடிதங்களும், மின்னஞ்சல்களுமாக எமக்கு வந்த உங்கள் கருத்துக்களை சரமாக்கி ஒலியேறும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் கருத்துக்களை எழுதியனுப்பும் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலை: நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பதும், நிகழ்ச்சிகளை பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக எழுதி அனுப்புவதும்தான் நேயர் நண்பர்களிடம் நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பவை.
க்ளீட்டஸ்: ஆம், நண்பர்களே. தொடர்ந்து உங்கள் ஆதரவை எமக்களித்து, எங்களை உற்சாகமூட்டுவீர்கள் என்று நம்புகிறோம்.
கடிதப்பகுதி
கலை: சீன மகளிர் நிகழ்ச்சி குறித்து நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். மியாவ் இனத்தைச் சேர்ந்த துவன்சி எனும் பெண்மணியின் சேவையை பற்றிய சீன மகளிர் நிகழ்ச்சி கேட்டேன். வீடு வீடாக சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று, கல்வி புகட்ட அவர் அரும்பாடு பட்டார் என்று அறிந்தேன். தனது சேவையை மற்றவர் பாராட்டியபோதுதான் அவர் தனது பணியின் மதிப்பை உணர்ந்தார் என்று தெரிந்துகொண்டேன். சேவை என்பது திடீரென முளைத்துவிடாது. முதலில் மனதில் அனுமதி வேண்டும், பிறகே சேவை தொடரும் என்ற காந்தியடிகளின் சிந்தனையே நினைவுக்கு வருகிறது.
க்ளீட்டஸ்: ராசிபுரம் ஆர். எம். மோகன் எழுதிய கடிதம். சீனாவில் பட்டு வளர்ந்த இடங்கள் பற்றி சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில் கேட்டேன். பெண்மணி ஒருவர் பட்டுப்பூச்சியை தலையில் மறைத்து வைத்து, புகுந்த வீட்டில் வைத்து வளர்த்து, அருகில் இருந்தவர்களுக்கும் பட்டுப்பூச்சி வளர்ப்பு பற்றியும் பட்டு நூல் தயாரிப்பு பற்றியும், அவர் கற்றுக்கொடுதார் என்றும் அழகான கதையை கேட்டோம். நாளடைவில் பட்டு உலகம் முழுதும் பரவியது என்பது புரிந்தது.


கலை: இலங்கை காத்தான்குடி மு. ஹ. மு. இர்ஃபான் எழுதிய கடிதம். நாள்தோறும் சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். மனதிற்கு மகிழ்ச்சியாகவும், கல்விக்கு உறுதுணையாகவும், சிறந்த பொழுதுபோக்காகவுமாக அமைந்த நிகழ்ச்சிகளை என் குடும்பத்தினரோடு கேட்டு வருகிறேன். மேலும் அதிக நிகழ்ச்சிகளை வழங்கி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
க்ளீட்டஸ்: அரியலூர் மாவட்டம் உத்திரக்குடி கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சீனாவின் முக்கிய இடங்களுக்கு வழங்கப்படும் சாட்டுப் பெயர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. ஷாங்காய் நறுமண நகரமென அழைக்கபடுகிறது என்று அறிந்துகொண்டேன். அதோபோல், மீன்பிடி நகரம், பசுமையான நகரம், ஏரிகளின் நகரம் என பல்வேறு இடங்களை பற்றி குறிப்பிட்டது நன்று.
கலை: தாசப்பகவுண்டன் புதூர் எஸ். சுதர்ஷன் எழுதிய கடிதம். இந்தியாவில் கர்நாடக மாநில அரசின் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் இலவசமாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்த செய்தியை கடிகாசலம் அவர்கள் வழங்கக் கேட்டேன். சீனாவில் போக்குவரத்து நிலைமை, ஓட்டுனர்களின் திறமை போன்றவற்றை அறிந்து நாடு திரும்பி தங்களது பணியில் அவர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிந்தோம்.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். திபெத்தின் உண்மையான நிலைமை என்ற செய்தித்தொகுப்பின் மூலம் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. திபெத் சுதந்திரம் பற்றிய பிளவுவாத சக்திகளின் பரப்புரை, சீன நடுவண் அரசின் திபெதி மீதான கவனம், திபெத் பொது மக்களின் கருத்து என பல தகவல்களை அறிய முடிந்தது.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
ஜனவரித் திங்கள் 22 ஆம் நாள் இடம்பெற்ற முதலாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில், •2009 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் தொடருகின்ற நம்பிக்கை• என்ற கட்டுரையைக் கேட்டேன். உலகளாவிய நிதி நெருக்கடியினால், அனைத்து முக்கிய நாடுகளும் கதிகலங்கிப் போயிருக்கின்றன. •ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்• என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு. இந்த நிதிநெருக்கடியில் அமெரிக்காவே நிலைகுலைந்திருக்கும் வேளையில், சீனாவின் பொருளாதார அதிகரிப்பு வேகம் மட்டும் நிலையாக இருப்பது, சீனாவைப் பற்றி தெரியாதவர்களுக்கு அதிசயமானதாக இருக்கலாம். ஆனால், சீனாவின் உண்மையான நண்பராக விளங்கும் என்னைப் போன்றவர்களுக்கு இத்தகைய வளர்ச்சி வேகம், வியப்பை ஏதும் அளிக்கவில்லை. சீனாவின் திட்டமிடல்களின் வலிமை என்னைப் போன்றவர்களுக்கு தெரியும். தொலைநோக்கு சிந்தனையினால், எத்தகைய இடர்ப்பாட்டையும் தகர்த்தெறியும் வல்லமை சீனாவிற்கு உண்டு. இயல்பான செயல்பாடுகளினால், நிதி நெருக்கடி என்ற இடர்ப்பாட்டையும் சீனா எளதில் சமாளித்துள்ளது. வாழ்த்துக்கள்.
விஜயமங்கலம், குணசீலன்
ஜனவரித் திங்கள் 22 ஆம் நாள் இடம்பெற்ற அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சீன கல்வித்துறையில் உலகமாயமாக்குதல் குறித்து அறிந்தோம். சீனாவில் 30 ஆண்டுகளுக்கு முன் கல்வித்துறையில் இவ்வளவு முன்னேற்றம் இல்லையென்றும், பின்னர் கல்வித்துறை மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு சீன அரசு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.


சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
சென்ற ஆண்டின் நடுப்பகுதியில் பேரிடர் மூலமாக கடும் பாதிப்புகளை சந்தித்த சிச்சுவானின் வென்ச்சுவான் மாவட்டம் சோக நினைவலைகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் அப்பகுதி மக்கள் "பீனீக்ஸ்" பறவை போல மீண்டும் உயிர்த் தெழுந்துள்ளனர். சீன நடுவண் அரசின் பணியாளர்களின் கடுமையான முயற்சியில், மறு சீரமைப்பின் மூலமாக இவ்வாண்டு வசந்த விழாவினை கொண்டாடுகிறார்கள் என்பதை செய்தித் தொகுப்பின் மூலமாக கேட்டதிலிருந்து சீன மக்களின் மனவலிமை புரிந்தது. சீன மக்கள் அனைவருக்கும் வசந்த விழா நல்வாழ்த்துக்கள்.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், வயது வயது ஆக உடலில் பல செயல்பாடுகளும், எண்ணி பேசும் திறனும் குறைகின்றன. மனித மூளையின் நலமான செயல்பாடுகளுக்கு இணையதளம் வசதி ஏற்படுத்தும் என்ற ஆய்வின் முடிவை அறிந்து கொண்டேன். மூளையின் செயல்பாட்டை இணையதள தேடுதல் வளர்ச்சி செய்யும் என்பது குறிபிடத்தக்கது.


பாண்டிச்சேரி, N. பாலகுமார்
மக்களுடன் இணைந்து வசந்தவிழா கொண்டாட்டம் என்ற செய்தி தொகுப்பின் மூலம் கேட்டு மகிழ்ந்தேன். ஜனவரி 26ம் நாள் சீனப் புத்தாண்டின் முதல் நாளாகும். நிலநடுக்கத்தின் பின் சிச்சுவான் மாநிலத்தில், மக்கள் உற்சாகத்துடன் வசந்த விழாவை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தியை உலக மக்களுக்கு எடுத்துரைத்தது போல இருந்தது. சீன தலைமை அமைச்சர் வென் சியாபாவ் சிச்சுவான் மாநிலத்திற்கு சென்று, உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இவ்விழாவைக் கொண்டாடியது இன்னும் சிறப்பு. இந்தியாவில் சீனமக்கள் வாழும் பகுதிகளில் வசந்த விழா கொண்டாட்டங்கள் நிகழ்ச்சி நடைபெற்ற செய்தியை தொலைக்காட்சி வழியாக கண்டுகளித்தேன்,
மதுரை 20, அண்ணாநகர், R.அமுதாராணி
சீன சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின், சர்வதேச நிலைமையில் அமைதி மற்றும் வளர்ச்சி உலகில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. தற்போது சீனா பிறநாடுகளுடன் சேர்ந்து பரஸ்பரம் நலன் தந்து கூட்டு வெற்றி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதகுலம் பொதுவாக எதிர் நோக்குகின்ற நெருக்கடி மற்றும் அறைகூவலை சமாளிக்கும் போது பிறநாடுகளின் தேர்வுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை சீனா நாடி வருகிறது. பாராட்டுக்குரியது.
பெரியகாலாப்பட்டு, பெ. சந்திரசேகரன்


கடந்த ஜனவரி 16ஆம் நாள் வழங்கிய சீன விளைநிலபரப்பு பாதுகாப்பு என்னும் செய்தித் தொகுப்பினை கலைமணி அவர்கள் வழங்க கேட்டேன். சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. அதற்கு விளை நிலங்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமே. இதன் மூலம் வீட்டின் விலை அதிகரித்த போதிலும், நாட்டு மக்களுக்கு அவசியமான உணவுத் தேவையை நிறைவு செய்ய கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சீன அரசு நாட்டு மக்களின் மீது நலன் கொண்ட அரசே என்று நினைக்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர்
சீனாவில் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் விழா "வசந்தவிழா". சீனாவின் இந்த பாரம்பரிய விழாவை முன்னிட்டு சீனத்தலைவர்கள் மக்களுக்கு வழங்கிய நல்வாழ்த்துக்கள், மக்களை மேலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என கருதுகிறேன். சீனத்த‌லைவர்கள் மக்கள் மேல் வைத்துள்ள ஆழமான அன்பை இது காட்டுகிறது. மேலும் வசந்தவிழா நல்வாழ்த்துக்களை சீன வானொலி தமிழ்ப் பிரிவு தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் உளமாற தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊட்டி, S.K.சுரேந்திரன்
ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் மக்கள் சீனம் நிகழ்ச்சியை சரஸ்வதி அவர்கள் வழங்கக் கேட்டேன். நிகழ்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளில் சீன பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததுடன், சீனா முன் கண்டிராத அளவில் உலகத்துடனான‌ பரிமாற்றங்களை மேற்கொண்டு பல துறைகளில் ஒத்துழைத்து வருவதை பற்றி கூறப்பட்டது. மேலும் ஐ.நா.அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பிறநாடுகளுடன் பரஸ்பர நலனை பேணிகாப்பது போன்ற நடவடிக்கைகளினால் சீன உலக நடுகளின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை இந்திகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டேன்.


பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
ஜனவரி 27ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் வாணி அவர்கள் வாசித்த செய்திகள், தேன்மொழி அவர்கள் வாசித்த செய்தித் தொகுப்புபான, சீன அரசுத் தலைவரின் அமெரிக்கப் பயணம், செய்தித் தொகுப்பான உலக உணவுப் பாதுகாப்பு, சீன கதை நிகழ்ச்சியில் பேரழகி சி ஷீ கதையின் ஒரு பகுதி, சீன பண்பாடு நிகழ்ச்சியில் சிவப்பு நிறத்துடன் தொடர்புடைய பல சுவையான தகவல்கள், நேருக்கு நேர் நிகழ்ச்சியின் ஐந்தாவது பகுதி மற்றும் அன்றாட சீனம் நிகழ்ச்சி என அனைத்தும் நன்றாக இருந்தது.