• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-17 10:44:15    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அறிவியல் தொழில் நுட்பச் சாதனை

cri

சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் ஷாங்காய் மாநகர அரசும் கூட்டாக முன்னேற்றும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான அறிவியல் தொழில் நுட்பச் செயல் திட்டம் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

16ம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சி செயல் திட்டம் பற்றிய தலைவர் குழுவின் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை கூறியது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட கடந்த 4 ஆண்டுகளாக, கட்டுமான வரைவு, எரியாற்றல், சுற்றுச்சூழல், நிர்வாகம், கண்காட்சி, பாதுகாப்பு ஆகிய 6 துறைகளுடன் தொடர்புடைய 140 அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றிலான பெரும் பகுதிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவுக்கான கட்டுமான வரைவு மற்றும் நிர்வாகத் துறைகளில் பயன்படுத்தப்பட்டன என்று தெரிய வருகின்றது.