சீனப் புத்தமதச் சங்கத்தின் திபெத் கிளை 9வது பிரதிநிதிகள் மாநாடு, 18ம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசாவில் நிறைவடைந்தது. சீனப் புத்தமதச் சங்கத்தின் திபெத் கிளையின் விதிமுறைகளை, அக்கிளையின் அனைத்து பிரதிநிதிகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். புத்தமதச் சங்கத்தின் திபெத் கிளை, சமூக நிதானத்தையும் மக்களின் அடிப்படை நலன்களையும் ஆக்கப்பூர்வமாகப் பேணிக்காக்கிறது. தாய்நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கைகளில் தன்னார்வத்துடன் கலந்து கொள்ள கூடாது என்ற கருத்தை இவ்விதிமுறை முன்வைத்தது.
திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய பல்வேறு பிரிவுகளின் மிக்க மத நம்பிக்கையாளரால் உருவாக்கப்படும், நாட்டுப்பற்று மிக்க மதக் குழுவான புத்தமதச் சங்கத்தின் திபெத் கிளை, திபெத்தின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வ பங்காற்றியுள்ளது.
|