• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 11:07:33    
குவோவை வெற்றிக்கொள்ள குறுக்குவழி

cri

சீன மொழியில் jia tu mie guo என்ற ஒரு சொற்றொடர் உண்டு. எல்லா மொழியிலும் பொதுவாக இது போன்ற மொழிவழக்கு, மொழி மரபுத்தொடர்களும், சொற்றொடர்களும் இருப்பதுண்டு.
jia tu mie guo என்றால் குவோவை வெற்றிகொள்ள குறுக்குவழியை இரவல் கேட்பது என்று பொருள்.
அவ்வண்ணமே chun wang chi han என்ற சொற்றொடருக்கு உதடுகளில்லாது போனால் பற்களுக்கு பாதுகாப்பில்லை என்று பொருள்.
இவ்விரண்டு சொற்றொடர்களும் வழக்கத்தில் வருவதற்கு ஒரு சிறிய கதை ஒன்று உண்டு.
கிமு 658ம் ஆண்டில் ச்சின் நாடு யு நாட்டு அரசனுக்கு மிகவும் அழகான விலைமதிப்புள்ள அன்பளிப்புகளை அனுப்பி, குவோ நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்காக யு நாட்டின் வழியே குறுக்குவழியில் செல்ல தமது படைகளை அனுமதிக்குமாறு வேண்டியது. யு நாட்டினூடாக சென்றால் குவோவை எளிதில் சென்றடையலாம். ஆனால் இந்த அன்பளிப்புகளையும் அதற்கு பின்னணியிலான கோரிக்கையையும் கேட்ட யு நாடின் அமைச்சர், அரசனிடம் இந்த கோரிக்கையின் பின்னணியில் அமைந்த ஒரு ஆபத்தை எடுத்துரைத்தான். "அரசே, யுவும் குவோவும் உதடுகளும், பற்களும் போல. உதடுகள் இல்லாது போனால் பற்களுக்கு அரணில்லை, பாதுகாப்பில்லை. குவோவை வென்றழித்த பின் அடுத்த இலக்கு யு தான். நமது நாட்டுக்குத்தான் இது ஆபத்தாக முடியும்" என்று அமைச்சர் எச்சரித்தார். ஆனால் அன்பளிப்புகளில் மனம் லயித்த அரசன், ஜின் நாட்டுக்கு தனது நாட்டினூடாக படைகளை குறுக்குவழியில் அனுப்பி குவோ நாட்டை தாக்குவதற்கு ஒப்புதல் கூறினான்.


எதிர்பார்த்தபடி குவோவை ஜின் நாட்டு படைகள் வெற்றிகரமாக தாக்கி வாகை சூடின. ஆனால் அத்தோடு ஜின் நாட்டு தாக்குதல் நிற்கவில்லை. அடுத்த இலக்காக, குறுக்குவழியாக பயன்பட்ட யு நாட்டையும் நாடு திரும்பும் வழியில் ஜின் நாட்டு படைகள் தாக்கின. வெற்றியும் கொண்டன.
பின்னாளில் ஒருவருக்கு தீங்கிழைக்க மற்றவரை பயன்படுத்திக்கொண்டு பின் அந்த மற்றவருக்கும் தீங்கேற்படுத்துவதை குறிக்க jia tu mie guo, குவோவை வெற்றிகொள்ள குறுக்குவழியை இரவல் கேட்பது என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், நெருக்கமான ஒரு தொடர்பின், உறவின் ஒரு பகுதி நீக்கப்பட்டால், அடுத்த பகுதியும் ஆபத்துக்குள்ளாகும் என்பதை குறிக்க, chun wang chi han உதடுகளில்லாது போனால் பற்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சொற்றொடர் உருவகமாக பயன்படுத்தப்பட்டது.
பாத்திரத்தில் விரலிடுவது ran zhi
சீன மொழியில் பாத்திரத்திற்குள் விரலிடுவது என்ற ஒரு சொற்றொடர் உண்டு. இந்த மரபுச் சொற்றொடருக்கு பின்னணியிலான கதை மற்றும் அதன் பொருளை அறியத் தருகிறோம்.


கிமு 605ம் ஆண்டில் ஷெங் நாட்டு அரசனை சந்திக்க வந்த ச்சூ நாட்டு தூதர்கள், அவருக்கு ஒரு பெரிய ஆமையை அன்பளிப்பாக அளித்தனர். ஷெங் நாட்டு அரசன் அன்பளிப்பாக வந்த அந்த பெரிய ஆமையை சமைக்கும்படி உத்தரவிட்டான். ஆமையை தனது அவையின் உயரதிகாரிகள், பிரபுக்களோடு விருந்துண்பதாக அரசன் திட்டமிட்டான். விருந்திற்கு செல்லும் வழியில், ஷெங் நாட்டு அரசில் உயர் அதிகாரிகளில் ஒருவனான, ஷு குங் தனது சுட்டுவிரல் துடிப்பதைக் கண்டான். தனது சகாவான ஷு ச்சியாவிடம், "எப்போதெல்லாம் இப்படி என் சுட்டுவிரல் துடிக்கிறதோ அப்போதெல்லாம், மிக மிகச்சுவையான உணவருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்" என்று கூறினான். ஷு குங் சொன்ன இந்த சுட்டுவிரல் துடிக்கும் கதை ஷெங் நாட்டு அரசனின் காதுகளை எட்டியது. விருந்துக்கு அனைவரும் வந்திருக்க அரசன் தனக்கு கிடைத்த அன்பளிப்பான பெரிய ஆமையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை அனைவருக்கு கொடுத்தான். ஆனால் ஷு குங்கிற்கு சுவையான அந்த உணவை அரசன் அளிக்கவில்லை. ஷு குங் அரசன் தனக்கு உணவில் பங்கு தராததைக் கண்டு கோபமடைந்தான். பசி ஒருபுறம் கோபம் ஒரு புறம். ஆமைக்கறியை கொண்டிருந்த பாத்திரத்திற்குள் தன் விரலை விட்டு, பின் அந்த விரலை தன் வாயில் வைத்து உறிஞ்சிவிட்டு, அங்கிருந்து வெளியேறினான். இதைக் கண்ட ஷென் நாட்டு அரசனுக்கு ஷு குங்கை கொன்று போடும் அலவுக்கு கடுங்கோபமெழுந்தது. சில காலம் சென்றது, தான் கொல்ல நினைத்த ஷு குங்கின் கையாலேயே ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் கொல்லப்பட்டான் செங் நாட்டு அரசன்.
பின்னாளில் ran zhi பாத்திரத்திற்குள் விரலிடுவது என்ற சொற்றொடர், தனக்குரிய பங்கை ஒருவர் எடுத்துக்கொள்வதை குறிக்க பயன்படுத்தப்பட்டது.