• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 15:49:47    
24வது ஹார்பின் உலக பல்கலைக்கழக மாணவருக்கான குளிர்கால விளையாட்டுப் போட்டி

cri
24வது ஹார்பின் உலக பல்கலைக்கழக மாணவருக்கான குளிர்கால விளையாட்டுப் போட்டி, 18ம் நாள் துவங்கியுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவரும், துணை கல்வி அமைச்சருமான சாங் சின் சேன், 16ம் நாள், செய்தியாளருக்கு பேட்டி

அளித்தபோது, இப்போட்டியின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆயத்தப் பணிகளை உயர்வாக பாராட்டினார். இவ்விளையாட்டுப் போட்டி, வெற்றி பெறுவது, 2018ம் ஆண்டு ஹார்பின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெற, விண்ணப்பம் செய்வதற்கு, துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
இப்போட்டி, துவங்குவதற்கு முன்பே, ஹார்பின் நகரின் ஆயத்தப் பணிகள், சர்வதேச பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுச் சம்மேளனம், வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் உயர்வாக பாராட்டப்பட்டுள்ளன.

சர்வதேச பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுச் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்கள், ஹார்பின் நகரின் ஆயத்தப் பணிகளை 2 நாட்கள் பார்வையிட்ட பின், பல்கலைக்கழக மாணவருக்கான குளிர்கால விளையாட்டுப் போட்டியை நடத்த, சிறந்த ஆயத்தப் பணிகளை ஹார்பின் நகரம், சீராக நிறைவேற்றியுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். துவக்க விழா முதல் நிறைவு விழா வரையாக அருமையான காலத்தை இரசிகர்கள் அனுபவிப்பர். எதிர்கால விளையாட்டுகளை பற்றி நான் உறுதியாக மதிப்பிடுவது குறைவு. ஆனால் இப்போட்டி வெற்றிகரமான விளையாட்டுப் போட்டியாக அமையும் என்று ஹார்பின் நகரம் மேற்கொண்ட பணிகளையும் முயற்சிகளையும் கண்டறிந்த பின், நான் உறுதியாக தெரிவிக்கிறேன் என்றார் அவர்.

ஹார்பின் பல்கலைக்கழக மாணவருக்கான குளிர்கால விளையாட்டுப் போட்டியின் கிராமம், 13ம் நாள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 44 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 4000 வீரர்களையும் வீராங்கணைகளையும் இது வரவேற்க தயாராகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த பனி சறுக்கல் வீரர் ஃபாரோலிதோ, ஒரு நாள் இக்கிராமத்தில் தங்கியிருந்த போதிலும், இக்கிராமத்தை உயர்வாக பாராட்டினார். அவர் பேசுகையில், இக்கட்டிடம் புதியது. இதில் பல்வகை வசதிகள் இருக்கின்றன. உணவுகள், மிக சுவையானவை. அதிக தன்னார்வ தொண்டர்கள்,பேரூக்கமானோர் என்று கூறினார்.
2005ம் ஆண்டில், இவ்விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற பின், ஹார்பின் நகரம், 300 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, விளையாட்டரங்குகளையும் வசதிகளையும் மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.