
மிருதுவான இடத்தில், கூரிய பாறைகள் காணப்படுவதால், பயணிகள் மேல் நோக்கிச் செல்லவோ கீழ் நோக்கிச் செல்லவோ முடியாமல், குதிக்காலால் நடக்க நேரிடுகிறது. குண்டாக இருப்போர் கவலைப்படும் இடம் என ஒன்று, இப்பூங்காவில் உள்ளது. வழியின் நடுவில் அமைந்துள்ள மாபெரும் பாறைக்கும் இவ்வழியின் பக்கத்திலுள்ள மலைக்குமிடையில் பல பத்து சென்டி மீட்டர் தொலைவு மட்டும் உள்ளது.

பயணிகள் ஒரு சாய்வாக, மலையை நெருங்கிச் செல்ல வேண்டி நேரிடும். பூங்காவின் நடைப்பாதைகள் ஒத்துக்காணப்படவில்லை இப்பூங்காவின் நுழைவாயிலில் உள்ள நடைப்பாதை ஜல்லி கல்லால் ஆனது. ஆனால், மலையில் ஏறினால், ஒழுங்கான தெப்பம் காணப்படுகின்றது. தொடர்ந்து சென்றால், வளைவு சுளிவான நடைப்பாதை பெரிய கற்பாதையாக மாறுகிறது. சுற்றுலாவின் போது, எழில் மிக்க வனக் காட்சியையும் கம்பீரமான மலையையும் பயணிகள் கண்டுகளிக்கலாம்.
|