• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-19 14:24:14    
பெய்ஜிங்கில் பாரம்பரிய யுவான்சியேள விழா கொண்டாட்டம்

cri


சீனச் சந்திர நாட்காட்டிப்படி, பிப்ரவரி 9ம் நாளன்று, சீனாவின் பாரம்பரிய யுவான்சியேள விழாவாகும். வசந்த விழா நாட்களில், இது முக்கியமான நாளாகும். நாட்டுப்புற பழக்கவழக்கத்தின் படி, யுவான்சியேள விழாவோடு, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைவதாக கூறலாம். யுவான்சியேள விழா நாளன்று, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி, யுவான்சியேள என்னும் ரப்பர் அரிசியால் சமைக்கப்பட்ட உருண்டை உணவைச் சாப்பிட்டு, விளக்குகளை ஏற்றி,

புதிர் யூகம் செய்து, பூ கொண்டாட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வர். இவ்வாண்டின் யுவான் சியேள விழா நாளில், 600 ஆண்டுக்கு மேலான வரலாறுடைய சீனாவில் மிக புகழ்பெற்ற வணிக வீதியான சியன்மென் வீதியில், பாரம்பரிய நாட்டுப்புற மலர் விழா கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது.
சியன்மென் வீதி, மொத்தமாக 840 மீட்டர் நீளமுடையது. அதன் இரு பக்கங்களிலும் கடைகள் அமைந்துள்ளன. கடந்த சில நூற்றாண்டு காலமாக, சியன்மன் பகுதி, சீன பாரம்பரிய கட்டிடப்பாணியுடன், பெய்ஜிங்கில் மாதிரி வீதிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுத்தோறும் ஏராளமான பயணிகள் இங்கே வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். சியன்மென் வீதி நிர்வாகக்குழுவின் பணியாளர் லீ போ கூறியதாவது:
     

இவ்வீதி, பண்டை காலத்தில் அரசனின் அரண்மணையை நெருங்கி அமைந்திருந்தது. அரசர் ஒவ்வொரு முறையும் வெளியே சென்ற போது, இவ்வீதியின் வழியாக தான் செல்வார். இதனால், வான் வீதி என அழைக்கப்பட்டது. 16ம், 17ம் நூற்றாண்டு முதல், இவ்வீதி வளர்ச்சியடைய துவங்கியது. பொது மக்கள், இங்கே வியாபாரம் செய்து, ஒன்று திரண்டு கூட்டங்கள் நடத்தினர் என்றார் அவர்.
கடந்த நூற்றாண்டின் 20 முதல் 30ம் ஆண்டுகளில், மேலை நாட்டுப் பண்பாட்டின் வருகையினால், சியன்மன் வீதியில் மேலை நாட்டு தனிச்சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. அப்போது தான், சீனாவின் பாரம்பரிய கட்டிடங்களில், ஐரோப்பிய பாணியுடைய கட்டிடம் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தொல்பொருள் பாதுகாப்பு வாரியங்கள், இந்த பண்டைய வீதியைச் சீரமைத்துப் பராமரித்துள்ளன என்று லீ போ அறிமுகப்படுத்தினார்.

2002ம் ஆண்டு முதல், பத்துக்கும் அதிகமான நிபுணர்களை அழைத்து, இவ்வீதியின் பண்பாடு மற்றும் வணிக மதிப்புகளை உறுதிப்படுத்துவது பற்றி விவாதித்துள்ளோம். கடந்த நூற்றாண்டின் 20 அல்லது 30ம் ஆண்டுகளிலான நிலைமையை மீட்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் பார்த்த இப்போதைய சியன் மன் வீதி, பழைய புகைப்படங்களின் படி கட்டிடங்களின் வெளி தோற்றங்கள் மீட்டெடுக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் இவ்வீதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பைப் பார்த்து திரும்பியதைப் போல, பண்டைக்கால பெய்ஜிங்கின் வரலாற்றையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ளும் செழுமையான விறுவிறுப்பான காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம் என்றார் அவர்.