• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-19 19:02:36    
திபெத் புத்தாண்டை வரவேற்கும் மக்கள்

cri
700 ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய திபெத் புத்தாண்டு திபெத் இனத்தின் மிக கோலாகலமான பாரம்பரிய விழாவாகும். அதனை திபெத் தன்னாட்சி பிரதேச அரசு சட்டப்படியான விழாவாகவும் விதித்துள்ளது. ஆண்டுதோறும் திபெத் மக்கள் 7 நாட்கள் விடுமுறையை அனுபவிக்கலாம். திபெத் நாட்காட்டியின் படி, இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் 25ம் நாள் திபெத்தின மாடு ஆண்டின் முதலாவது நாளாகும். இப்போது திபெத்தில் எங்கெங்கும் விழாவை வரவேற்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.

Losang என்பவர் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Dangxiong வட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆயராவார். ஒவ்வொறு திபெத் புத்தாண்டுக்கும் முன், அவர் தலைநகர் லாசாவின் மைய பகுதியில் ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, திபெத் எருமை இறைச்சியை விற்பனை செய்கின்றார். அவர் கூறியதாவது

இவ்வாண்டு நல்ல லாபம் கிடைத்தது. கடந்த திங்களில் சுமார் சில பத்தாயிரம் யுவான் சம்பாதித்தேன். ஆகையால், இந்த சிறிய இடத்தை விட்டு பெரிய ஒரு கடைக்கு இடம்மாறினேன். சில நாட்களுக்கு பின், குடும்பத்தினருக்கு ஆடைகளை அன்பளிப்பாக வாங்கி ஊருக்கு திரும்புவேன் என்று அவர் கூறினார்.

Losangஐப் போல பல விவசாயிகளும் ஆயர்களும் திபெத் புத்தாண்டுக்கு முன், லாசாவுக்கு வந்து பொருட்களை விற்பனை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், திபெத் மக்களின் பொருள் வாங்கும் ஆற்றல் தெளிவாக உயர்ந்துள்ளது. குளிர்காலத்தில், மிகப்பல திபெத் விவசாயிகளும் ஆயர்களும் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், லாசாவில் வேளாண் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்றனர். இது திபெத் புத்தாண்டுக்கு முந்தைய ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த காட்சியாக மாறியுள்ளது.

புத்தாண்டு வருவதுடன், திபெத்தின் பல்வேறு வணிக பிரதேசங்கள் பரபரப்பாகி வருகின்றன. குறிப்பாக லாசாவிலுள்ள பல்வகை பேரங்காடிகள் பல சலுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு இடங்களின் மக்களை ஈர்த்துள்ளன. லாசா நகரிலுள்ள மிகப் பெரிய சந்தையான Chomsigkang இல் Lodro Tsering என்பவரைச் சந்தித்தோம்.அவர் பல பொருட்களை வாங்கினார். அவர் மகிழ்ச்சியாகக் கூறியதாவது

உலர்ந்த பழங்களையும் இனிப்புகளையும் வாங்கினேன். தற்போது, சந்தைகளில் அதிக பொருட்கள் விற்பனை செய்யபடுகின்றன. மகிழ்ச்சியுடன் புத்தாண்டை எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.

இளைஞர் Loten லாசா பேரங்காடிக்கு அருகில் மங்கல வாசகங்கள் எழுதிய தாள்களை வாங்கினார். புத்தாண்டில் திபெத் இளைஞர்கள் இந்த மங்கல வாசகங்கள் எழுதிய தாள்களையும் பூக்களையும் செடிகளையும் வாங்க விரும்புகின்றனர். அவர் கூறியதாவது

திபெத் மொழியிலான மங்கல வாசகங்கள் எழுதிய தாள்களை வாங்கினேன். இது, ஹான் இனத்தின் தனிச்சிறப்பாகும். தற்போது, திபெத் மொழியில் அவற்றை எழுதுவது புதிதாக வரவேற்கப்படுகின்றது. நலமுடன் வாழ்க என்று எழுதினேன் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, திபெத் பொருளாதாரம் வேகமாக அதிகரித்துள்ளது. திபெத் மக்களின் வருமானமும் பெரிதும் உயர்ந்துள்ளது. 2003ம் ஆண்டு முதல், திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம் 5வது ஆண்டாக 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. 2008ம் ஆண்டு அவர்களின் நபர்வாரி வருமானம் 3700 யுவானைத் தாண்டியுள்ளது. அதிக வருமானத்துடன் மக்கள் புத்தாண்டு விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட முடியும்.

தவிர, புத்தாண்டின் போது, திபெத்தின் பல்வேறு பண்பாட்டு வாரியங்கள் பல கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. அவை திபெத் மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை செழிப்பாக்குகின்றன.

திபெத் தொலைக்காட்சி நிலையம் 24ம் நாள், திபெத்தின் மகிழ்ச்சிக்கர பாடல் எனும் சிறப்பு கலை நிகழ்ச்சியை வழங்கவுள்ளது. பெய்ஜிங், சி ச்சுவான், யுன்னான், கான்சூ முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 800 கலைஞர்கள், திபெத் கலைஞர்களுடன் இணைந்து இதை அரங்கேற்றுவர்.