திபெத் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்தை சீனா செயல்படுத்தும். திபெத்திலுள்ள உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல், சமூகம் பொருளாதாரம் ஆகிடயவற்றுடன் ஒருங்கிணைந்து வளர்வதை நிறைவேற்றும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர், 20ம் நாள் பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தினார்.
திபெத் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்திற்கு சீன அரசவை 18ம் நாள் ஒப்புதல் அளித்தது. உலக வெப்பமேறல் உள்ளிட்ட பிரச்சினைகளால், திபெத் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற பாதிப்பைச் சமாளிக்க, சீனா, இப்பிரதேசத்தில் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுமானம் முதலிய துறைகளிலான 10 திட்டப்பணிகளை மேற்கொள்ளும் என்று இந்தப் பொறுப்பாளர் கூறினார்.
|