• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-20 18:56:33    
யீ இன மக்களின் விழாக்கள்(அ)

cri

புத்தாண்டு விழா

யீ இனத்தின் புத்தாண்டு, யீன இன மொழியில் kushi என்று கூறப்படுகிறது. இது அவர்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவாகும். விழாவின் போது குடும்பதினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கூடி கொண்டாடுகின்றனர் அல்லது பரஸ்பரம் பயணம் மேற்கொள்கின்றனர். இதைக் கொண்டாடும் நாள், வானவியல் அறிந்த முதியோரால் தீர்மானிக்கப்படுகிறது. இவ்விழா, யீ இன நாட்காட்டின்படி 10ம் திங்களின் முதல் 10 நாட்கள்

கொண்டாடப்படுகிறது. அவ்வாண்டு அமோக அறுவடை பெற்றால், அடுத்த ஆண்டில் அதே மங்கள நாளில் புத்தாண்டைக் கொண்டாடுவது வழக்கம். அமோக அறுவடை பெறாவிட்டால், இன்னொரு நாளை தெரிவு செய்து புத்தாண்டைக் கொண்டாடுவர். விதியின்படி ஹன் இன மக்களின் வசந்த விழாவுக்கு முன், யீ இன புத்தாண்டு விழா கொண்டாடப்பட வேண்டும்.

இவ்விழாவின் தொடக்கம் பற்றி வரலாற்று பதிவுகள் இல்லை. ஆனால், வழக்கபடி ஒவ்வொரு அறுவடை காலத்திற்குப் பின், யீ இன மக்கள் புத்தாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். இதன் மூலம், பழமையை விட்டு புதியதை வரவேற்பது, மூதாதையர் மீதான மதிப்பு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

Tiaogong விழா

மூன்று நாட்களாக கொண்டாடப்படுகின்ற இவ்விழா, குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நா போ மாவட்டத்தின் பாரம்பரிய விழாவாகும். விழாவின் போது அனைவரும் குறிப்பிட்ட பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும். மகளிர் வெள்ளை மேல் அங்கியையும், கறுப்பு கீழாடையையும் அணிந்து, கழுத்துச் சங்கிலிகள் மற்றும் வட்டவடிவிலான காதணிகளால் தங்களை அலங்கரிக்கின்றனர். இளைஞர்கள், 4 புதிய மேல் அங்கிகளை அணிக்கின்றனர். நீலவண்ண சட்டையை அணிந்துள்ள 9 ஆண்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொடு நீள மூங்கில் குச்சியை கையில் எடுத்து கொண்டு, அரங்கில் கூடுகின்றனர்.

 

மாவட்டத்தின் தலைவர், அனைவருக்கு தலைமை தங்கி, பன்றித் தலையை வைத்து மூதாதையரை வழிபடுகிறார். பின்பு, பொன் மூங்கில் என்ற நடனம் ஆடுவதன் துவக்கத்தை அவர் அறிவிக்கிறார். தொடர்ந்து அனைவரும் lusheng இசையில் நடனமாடுகின்றனர். இந்த நடன நடவடிக்கைகள் 2 நாட்கள் நீடிக்கின்றன. 3ம் நாளின் மத்திய வேளையில், அனைவரும் மலை உச்சிக்கு ஏறி சென்று மாவட்டத் தலைவரின் தலைமையில் மீண்டும் மூதாதையரை வழிபடுகின்றனர்.