• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-20 10:52:05    
ஐ.நா. அதிகாரி பாராட்டு

cri

ஐ.நாவின் துணை தலைமைச் செயலரும், சுற்றுச்சூழல் வரையறை ஆணையத்தின் செயல் இயக்குநருமான ஸ்டெய்னர், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் பெற்ற சாதனைகளை உள்ளூர் நேரப்படி 16ம் நாள், உயர்வாக பாராட்டினார். சீனா, இதர நாடுகளுக்கு சிறந்த மாதிரியாக திகழ்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
அன்று நைய்ரோபி நகரில் நடைபெற்ற ஐ.நாவின் சுற்றுச்சூழல் வரையறை ஆணையத்தின் 25வது செயல் குழு கூட்டம் மற்றும் உலக அமைச்சர் நிலை சுற்றுச்சூழல் மன்றத்தின் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் இதை

தெரிவித்தார். பெய்ஜிங் வெளியிட்ட தூய்மைக்கேடற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டி என்ற கருத்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய அம்சமாக மாறியிருந்தது. இது ஆழந்த பொருள் வாய்ந்ததாக அமைந்தது என்று அவர் கூறினார்.
2009ம் ஆண்டு உலக ஆடவர் கைப்பந்து போட்டி தொடரின் நிகழ்ச்சித்திட்டத்தை சர்வதேச கைப்பந்து சம்மேளனம் 17ம் நாள் வெளியிட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதல் 8 இடங்களில் நுழைந்த சீன அணி, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும். இதையடுத்து, சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள நன் ச்சிங் நகரில் 3 வாரங்களில் நடைபெறும் 6 ஆட்டங்களில் கலந்துகொள்ளும்.
கடந்த ஓராண்டில் இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற, அமெரிக்க அணி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தையும் பெற்றது.

இப்போட்டியின் சாம்பியன் பட்டங்களை 8 முறை இத்தாலி அணி பெற்றுள்ளது. 1996ம் ஆண்டில் இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை நெதர்லாந்து அணி பெற்றது. இதனால், சீன அணி, A குழுவின் முதலிடம் பெற்று, இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள பல சிரமங்களை எதிர்நோக்கும்.
அமெரிக்க பிரதிநிதிக் குழுவின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இப்போட்டியில் சுயவிருப்பத்துடன் கலந்துகொள்வர். இப்போட்டியில் கலந்துகொள்ளும் அனுபவங்களிலும், ஹார்பின் நகரத்தின் ஈர்ப்பாற்றலிலும் அவர்கள் கவனம் செலுத்துவர் என்று அமெரிக்க பிரதிநிதிக் குழுவின் அதிகாரி ஒருவர் 17ம் நாள் தெரிவித்தார்.
நேயர்கள் இதுவரை விளையாட்டுச் செய்திகள் நிறைவுபெறுகின்றன.
9வது உலக குளிர்கால சிறப்பு விளையாட்டுப் போட்டியில் 33 தங்கப்பதக்கங்களை பெற்ற, சீனப் பிரதிநிதிக் குழு, 16ம் நாள் விமானம் மூலம், பெய்ஜிங்குக்கு

திரும்பியது. அமெரிக்காவின் ஜடகோ நகரில் நடைபெற்ற நடப்பு விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற மொத்த 7 போட்டிகளில் ஐந்தில் சீன பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது. ஐந்து போட்டிகளிந் பல்வேறு பிரிவுகளில் விளையாடி, 33 தங்கம், 34 மற்றும் 27 வெண்கலப்பதக்கங்களை சீன பிரதிநிதிக் குழு பெற்றது.
சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் லியு பொங், ஜப்பான் அமைச்சரவை செயலகத்தின் தலைவர் காவாமுராவை 16ம் நாள் டோக்கியோ மாநகரில்,சந்தித்துரையாடினார். விளையாட்டு துறையில், சீன-ஜப்பான் உறவுக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். டோக்கியோ மாநகரம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை விண்ணப்பம் செய்வதற்கு, ஆசியாவின் பல்வேறு நாடுகள், ஆதரவு அளிக்கும் என்றும் லியு பொங் தெரிவித்தார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சின் அழைப்பை ஏற்று, லியு பொங் ஜப்பானில் பயணம் மேற்கொண்டார்.