• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-20 10:57:17    
சீனாவின் பெண் அறிவியலாளர்கள்

cri
சமூகத்தின் முன்னேற்றத்துடன் சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் துறையில் மேலதிக பெண் பணியாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில், அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் மூவரில் ஒருவர் பெண்ணாவார். அண்மையில் நடைபெற்ற சீன அறிவியல் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில், பெண் அறிவியலாளர்களின் உயர் நிலை கருத்தரங்கு சிறப்பாக நடத்தப்பட்டது. பெண்களின் வளர்ச்சியும் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வும் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

மௌ ஜியன் சின் அம்மையார், பெய்ஜிங் விமான மற்றும் விண்வெளிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராவார். 1960ஆம் ஆண்டுகளில் Peking பல்கலைக்கழகத்திலிருந்தும் பெய்ஜிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்திலிருந்தும் பட்டம் பெற்ற பின், தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவியல் ஆய்வுத் துறையில் அவர் ஈடுபடத் தொடங்கினார். 1985ஆம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்ட பின் முனைவர் பட்டம் பெற்ற முதல் தொகுதி நபர்களில் ஒருவராக மாறினார். தற்போது, சீனாவின் கட்டுப்பாட்டு தத்துவம் மற்றும் பொறியியல் துறையில் புகழ்பெற்ற அறிஞராக அவர் திகழ்கிறார். அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான பெண்கள் அணியின் வளர்ச்சியை அவர் நேரில் கண்டுள்ளார்.
"விடுதலை பெற்ற பின் சீனா வளர்த்த பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் முன்பை விட சமூகத் தகுநிலையில் உயர்வாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கின்றனர். குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றனர்" என்றார் அவர்.
அறிவியல் ஆய்வுத் துறையில் சாதனை பெற விரும்பினால், ஆண்களை விட பெண்கள் மேலும் பெரும் முயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மௌ ஜியன் சின் கூறினார். குடும்பத்தைப் பராமரிப்பதன் காரணமாக, லண்டன் இம்பீரியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெறக் கூடிய வாய்ப்பை அவர் கைவிட்டார். ஆனால், விமான மற்றும் விண்வெளித் துறையைப் போன்ற உயர் தொழில் நுட்பத் துறையில் பெண்கள் தலைசிறந்தவர்களாக செயல்பட முடியும் என்பதை அவர் பெற்றுள்ள சாதனை கோடிட்டுக் காட்டியுள்ளது.

"எனது அனுபவங்களிலிருந்து பார்த்தால், விமான மற்றும் விண்வெளித் துறையிலான ஆய்வுப் பணி, கடினமான மூளை உழைப்பாக இருந்த போதிலும், பெண்கள் ஆண்களைப் போல், இத்தகைய பணியை முழுமையாக ஏற்க முடியும்" என்றார் அவர்.
1949ஆம் ஆண்டு நவசீனா நிறுவப்பட்ட பின், மௌ ஜியன் சின் போன்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற பெண் அறிவியலாளர்கள் பலர் தோன்றி வருகின்றனர். சீனாவின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்களின்படி, தற்போது சீனாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேலாகும். இது அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 37 விழுக்காடு வகிக்கிறது. சீனாவின் அதியுயர் அறிவியல் ஆய்வு நிலையை வெளிப்படுத்தும் சீன அறிவியல் கழகம் மற்றும் சீனப் பொறியியல் கழகத்தில், சுமார் 70 பெண் மூதறிஞர்கள் உள்ளனர். அறிவியல் தொழில் நுட்பக் குழுவில் சீனாவின் உயர் நிலை பெண் அறிவியல் தொழில் நுட்பத் திறமைசாலிகள் வகிக்கும் விகிதாச்சாரம், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய வளர்ந்த நாடுகளை விட அதிகமாகும். சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவி லியூ ஷு அம்மையார் கூறியதாவது—
"சீனாவின் பெண் அறிவியல் தொழில் நுட்பக் குழுவினர் இளமையாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 50 வயத்துக்குட்பட்டவர்கள். நமது நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி மாணவியரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் வளம் போதிய அளவில் இருப்பதை இது காட்டுகிறது" என்றார் அவர்.

சீனாவில் பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் அதிகரிப்பு, அவர்களின் இடைவிடா முயற்சியுடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். மட்டுமல்ல, சீனச் சமூகத்தின் வளர்ச்சியும் பெண்களின் தகுநிலை உயர்வும் இதற்கு இன்றியமையாதவை. சீனாவில் அடிப்படை கல்வியிலும் உயர் நிலை கல்விக் கட்டத்தி்லும் ஆண்களுக்கு சமமான உரிமையை பெண்கள் அனுபவிக்கின்றனர். அறிவியல் ஆய்வுத் துறையில் அவர்கள் நுழைவதற்கு இது சிறந்த அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஹேநான் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவி வாங் யன் லிங் இது பற்றி ஆழ்ந்த உணர்வு கொண்டுள்ளார். அவர் கூறியதாவது—
"கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் உயர் நிலை கல்வியைப் பெற்ற மாணவர்களில், ஆராய்ச்சி மாணவியர் உள்ளிட்ட மாணவியர் எண்ணிக்கை, முன்கண்டிராத முறையில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவியர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 47.08 விழுக்காடு வகிக்கிறது. அவர்களில் முதுகலை பட்டத்துக்கான மாணவியர் 46.02 விழுக்காடாகவும் முனைவர் பட்டத்துக்கான மாணவியர் 32.57 விழுக்காடாகவும் இருக்கின்றனர்" என்றார் அவர்.
ஆனால் அறிவியல் ஆய்வுப் பாதையில் பெண்களின் வளர்ச்சி பல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றது. உலகளவில், சமனற்ற வாய்ப்பு, ஒரே துறையிலான பாகுபாடு, நியாயமற்ற தெரிவு விதிமுறை உள்ளிட்ட காரணிகளால், உயர் நிலை பெண் அறிவியல் ஆய்வாளர்கள் குறைவு என்ற நிலை நிலவுகிறது. சிறந்த சமூகச் சூழ்நிலை பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகும். நமது சமூகம் அவர்களுக்கு மேலும் பெரும் கவனத்தையும் மதிப்பு மற்றும் புரிந்துணர்வையும் காட்ட வேண்டும் என்று சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவி லியூ ஷு அம்மையார் தெரிவித்தார்.

பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் வளர்ச்சியைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை, மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாகும். 2004ஆம் ஆண்டில் சீன இளம் பெண் அறிவியலாளருக்கான பரிசு உருவாக்கப்பட்டது. இவ்வாண்டு வரை பல பத்து இளம் பெண் அறிவியலாளர்கள் இப்பரிசைப் பெற்றுள்ளனர். 2007ஆம் ஆண்டில் சீன பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. பரஸ்பரப் பரிமாற்றம் செய்வது, முன்மொழிவு மற்றும் கருத்துக்களைத் தெரிவிப்பது, சமூக ஆலோசனை வழங்குவது ஆகியவற்றின் மூலம், அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதாரம், சமூக வளர்ச்சி ஆகியவற்றில் பெண்கள் மேலும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
தவிரவும், 2009ஆம் ஆண்டு பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர், குறிப்பாக வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கிடை பரிமாற்றம் மற்றும் உரையாடலை முன்னேற்றும் பொருட்டு, சீன அறிவியல் கழகம் பல சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, பெய்ஜிங்கில் மகளிர் அறிவியல் அமைப்பு மாநாட்டை நடத்தும்.