திபெத் புத்தாண்டான பிப்ரவரி 25ம் நாள் நெருங்கி வரும் தருணத்தில் சீனாவின் சிச்சுவான் மாநில அரசு 19ம் நாள் கெஞ்சி திபெத் இன தன்னாட்சி சோவில் 4 இலட்சத்து 80 ஆயிரம் திபெத் இன ஆயர்களுக்கு புதிய கூடாரங்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை விநியோகித்தது.
சிச்சுவான் மாநிலத்தின் கெஞ்சி மற்றும் ஆப்பா திபெத் மற்றும் சியாங் இன தன்னாட்சி சோக்கள் திபெத் இன மக்கள் குவிந்து வாழும் பிரதேசங்களாகும். அங்கு வாழும் இலட்சக்கணக்கான திபெத் இன மக்களில் பாதிபேர் ஆயர்களாவர்.
அடுத்த 4 ஆண்டுகளில் சிச்சுவான் மாநிலத்தின் திபெத் இன குடியிருப்புகளில் வாழ்கின்ற திபெத் இன ஆயர்களிடையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடுகள், புதிய கூடாரங்கள் ஒன்பதும், ஒவ்வொரு கிராமத்திற்கும் நடவடிக்கை மையம் என்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
|