லாசாவில் பயணம் மேற்கொள்கின்ற பயணி
இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறை நாட்களில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. வசந்த விழா காலத்தில், சுமார் 58 ஆயிரம் பயணிகள் திபெத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 2.2 விழுக்காடு அதிகமாகும். இக்காலத்தில் சுற்றுலாத் துறையின் மொத்த வருமானம், 3 கோடியே 90 இலட்சம் யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 1.8 விழுக்காடு அதிகரித்தது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
|