திபெத்தின் புத்தாண்டு நாள் நெருங்கி வரும் வேளையில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் கான்ச்சி திபெத் இனத் தன்னாட்சி சோவில் வாழ்கின்ற ஆயரான Kholo dorshi, புதிய கூடாரம், கணப்பு அடுப்பு முதலிய அரசு இலவசமாக வினியோகித்த வாழ்க்கை வசதிகளை பெற்றார். புத்தாண்டுக்கு முன்பு கிடைத்த மிக நல்ல அன்பளிப்புப் பொருட்கள் இவை ஆகும் என்று Kholo dorshi கூறினார்.
சிச்சுவான் மாநில அரசு செயல்படுத்தும் திபெத் பிரதேசத்திலான ஆயர்களின் புதிய வாழ்க்கை என்ற திட்டத்தில் பயனடைந்தவர்களில் அவர் ஒருவராவார். இத்திட்டப்படி, சிச்சுவான் மாநிலத்தின் திபெத் இன மக்கள் வாழும் பிரதேசத்திலான 1இலட்சம் ஆயர்களின் வீடுகளுக்கு, முழுமையான வாழ்க்கை வசதிகளைக் கொண்ட புதிய ரக கூடாரத்தை அரசு இலவசமாக வழங்கும். மடித்து வைக்கக் கூடிய கட்டில், உருக்கால் செய்யப்பட்ட கணப்பு அடுப்பு, சூரிய ஆற்றல் விளக்குகள் உள்ளிட்ட 9 அடிப்படை வசதிகள் இக்கூடாரத்தில் இடம்பெறுகின்றன.
|